PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தரவு என்றால் என்ன?
நமது சுற்றுப்புறத்தை உற்று நோக்குங்கள். நம் உலகில் பில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். நம்மிடம் ஏராளமான வாகனங்கள் இருக்கின்றன; ஏராளமான ஆடைகள் மற்றும் அணிகலன்கள் உள்ளன; நாம் பல விதமான படிப்புகளைப் படிக்கின்றோம். இவை அனைத்தும் தகவல்கள் என்பதை இங்கு பார்க்கலாம். சில விஷயங்களைப் பற்றி அறிய இந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்.
 
எடுத்துக்காட்டாக, கிராமப்புறங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தால், அங்கே குறைவான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன என்பதைக் காணலாம். அரசாங்கம் இந்தத் தகவலைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியில் தேவையான வசதிகளை பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை உருவாக்குகிறது. இந்தத் தகவல் சேகரிப்பும் சிக்கலும் தரவு எனப்படும்.
தரவு என்பது தகவல்களைச் சேகரிப்பது, அளவிடுவது மற்றும் பகுப்பது, பிறகு அவற்றைப் படமாகவோ அல்லது வரைபடமாகவோ காட்சிபடுத்துவது ஆகும்.
Example:
தீபாவளி பண்டிகைக்கு முகிலன் புதிய ஆடைகளை வாங்கினார். அவர் வாங்கிய ஆடைகள் \(5\) சட்டைகள், \(2\) கால்சட்டைகள், மற்றும் \(2\) காலணிகள். பின்னர், அவர் எத்தனை ஆடைகள் தனது அலமாரியுனுள் உள்ளன என்பதைக் கணக்கெடுத்தார்.
 
shutterstock_1465178210-w937.jpg
 
உடை
மொத்த எண்ணிக்கை
சட்டைகள்
\(12\)
கால்சட்டைகள்
\(7\)
அரைக்கால் சட்டைகள்
\(3\)
காலணிகள்
\(4\)
 
மேலே உள்ள தகவல் தரவு என்று அழைக்கப்படுகிறது.