PDF chapter test TRY NOW

இணைக்கோடுகள்:
இரண்டு கோடுகள் எந்தவொரு புள்ளியிலும் சந்திக்காமல் ஒரே தூரத்தைக் கொண்டிருந்தால், அவை "இணைக்கோடுகள்" என்று அழைக்கப்படுகின்றன.
Parallw2338.png
Example:
Shelves.png
 
இங்கு அலமாரியில் உள்ள அடுக்குகள் ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதை நாம் காணலாம். இது இணைக்கோடுகளுக்கான உதாரணம்.
வெட்டும் கோடுகள்:
இரண்டு கோடுகள் ஒன்றையொன்று வெட்டி ஒரு பொதுவான புள்ளியைப் பகிர்ந்து கொண்டால், அவ்விரண்டு கோடுகளும் "வெட்டும் கோடுகள்" என்று அழைக்கப்படுகின்றன. அந்த பொதுவான புள்ளியானது "வெட்டும் புள்ளி" எனப்படுகிறது.
inter.png
 
இங்கே, AB மற்றும் CD என்ற இருகோடுகளும் O என்ற புள்ளியில் வெட்டிகொள்கின்றன. எனவே, இவை வெட்டும் கோடுகள் என்றழைக்கப்படுகின்றன.
Example:
Scissor.png
 
கத்தரிக்கோலில் உள்ள உலோக கத்திகள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டுவதை நாம் காணலாம். இது வெட்டும் கோடுகளுக்கான ஒரு உதாரணம்.