PDF chapter test TRY NOW
ஒரு கோட்டுத்துண்டிற்கு இரண்டு முனைப்புள்ளிகள் இருக்கும். கோட்டுத்துண்டை இரண்டு வழிகளில் நாம் வரையலாம்.
(i) அளவுகோலைப் பயன்படுத்தி வரைதல்.
(ii) அளவுகோல் மற்றும் கவராயத்தைப்(compass) பயன்படுத்தி வரைதல்.
அளவுகோலைப் பயன்படுத்தி கோட்டுத்துண்டு வரைதல்:
அளவுகோலைப் பயன்படுத்தி 5.5 \ \text {செ.மீ.} நீளமுடைய கோட்டுத்துண்டு
வரைக.

படி 1: அளவுகோலை ஒரு தாளில் வைக்கவும்.
படி 2: இப்பொழுது அளவுகோளில் 5 \text {செ.மீ.} க்கு அடுத்து உள்ள 5 சிறுகோடுகளை எண்ணவும். அப்புள்ளிக்கு B என பெயரிடவும்.
படி 3: இதுவே தேவையான கோட்டுத்துண்டு AB = 5.5 \ \text {செ.மீ.} ஆகும்.
அளவுகோல் மற்றும் கவராயத்தைப்(compass) பயன்படுத்தி கோட்டுத்துண்டு வரைதல்.
அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி AB = 5 \ \text {செ.மீ.} நீளமுடைய கோட்டுத்துண்டை வரைக.
படி 1: அளவுகோலை ஒரு தாளில் வைக்கவும்.

படி 2: ஒரு நீளமான கோட்டினை வரையவும்.

படி 3: கவராயத்தின் உலோக முனையை 0 விலும் மற்றும் எழுதுகோல் முனையை 5 \ \text {செ.மீட்டரிலும்} அளவுகோலின் மேல் வைக்கவும்.

படி 4: இப்பொழுது, கவராயத்தின் அளவை மாற்றாமல் அப்படியே கோட்டின் மீது வைத்து ஒரு வில் வரையவும்.

படி 5: கவராயத்தின் உலோக முனையை கோட்டின் மீது வைத்த இடத்தை A என்றும், வில் வெட்டிய இடத்தை B என்றும் பெயரிடுக.

இங்கு, AB = 5 \ \text {செ.மீ.} என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.