PDF chapter test TRY NOW
எண் கணித மற்றும் இயற்கணித கோவையை மரவுரு வரைபடமாக வரைதல் பற்றி பார்த்தோம்.
தற்போது, மரவுரு வரைபடத்தை எண் கோவை மற்றும் இயற்கணித கோவையாக வரைதல் பற்றி அறியலாம்.
Example:
கீழ்கண்ட மரவுரு வரைபடத்தை எண் கணித கோவையாக மாற்றுக.
தீர்வு:
கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தின் எண் கோவையை கீழிருந்து மேலாக காண வேண்டும்.
மேற்கண்ட படத்திலிருந்து கிடைக்கபெறும் கோவை \(4 - 3\).
இங்கு, கிடைக்கபெற்ற கோவையை அடைப்பு குறிக்குள் எழுத வேண்டும்.
எனவே, இங்கு கிடைக்கப்பெற்ற எண் கோவை \(=(4 - 3)\)
மேலும், கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தின் எண் கோவை \(2 \times (4 - 3)\).