PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாம் எண்கள் மற்றும் வடிவங்களைப் பற்றி இதுவரைப் படித்திருக்கின்றோம்.
கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற எண்களின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொண்டோம். எண்களைக் கையாளும் கணிதத்தின் கிளை எண்கணிதம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், இரு பரிமாண, முப்பரிமாண வடிவங்களைப் பற்றி அதன் பண்புகளுடன் கற்றுக்கொண்டோம். வடிவங்களைக் கையாளும் கணிதத்தின் கிளை வடிவியல் என்று அழைக்கப்படுகிறது.

நாம் இப்பொழுது இயற்கணிதம் எனப்படும் கணிதத்தின் மற்றொரு கிளையை அறிந்து கொள்ளலாம்.
இயற்கணிதம் என்பது எண்கணிதத்தின் நீட்சியாகும்.
இதில், ஆங்கில எழுத்துக்களை (சில இடங்களில் எண்களுக்குப் பதிலாக) பயன்படுத்தக் கற்றுக்கொள்ளப் போகிறோம் .
ஆங்கில எழுத்துக்களின் உதவியுடன், சூத்திரங்களை எழுதுவோம்.
இதில், ஆங்கில எழுத்துக்களை (சில இடங்களில் எண்களுக்குப் பதிலாக) பயன்படுத்தக் கற்றுக்கொள்ளப் போகிறோம் .
ஆங்கில எழுத்துக்களின் உதவியுடன், சூத்திரங்களை எழுதுவோம்.
எனவே, மாறிகளைக் கையாளும் கணிதத்தின் கிளை இயற்கணிதம் என்று அழைக்கப்படுகிறது.
இயற்கணிதம் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்
சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படுகிறது. அவற்றுள் சில:
(i) தோட்டத்திற்கு வேலி அமைக்க நீளத்தைக் கணக்கிடுதல்.
(ii) மொத்த விலையை வைத்து வாங்கிய பொருட்களின் எண்ணிக்கையை தீர்மானித்தல்.
(iii) தூரம் மற்றும் வேகத்தை வைத்து பயணம் செய்ய எடுக்கும் நேரத்தைக் கண்டறிதல்.
(iv) ஒரு தொடர் வரிசையில் விடுபட்ட எண்களைக் கண்டறிதல்.