PDF chapter test TRY NOW

பின்வரும் வரிசையில் அடுத்து வரும் ஆரஞ்சுகளின் எண்ணிக்கையை உங்களால் கணிக்க முடியுமா?
 
1w3589.png
 
நம்மால் கணிக்க முடியும்.
 
முதல் செங்குத்து வரிசையில் \(2\) ஆரஞ்சுகள் உள்ளன.
 
இரண்டாம் செங்குத்து வரிசையில் \(4\) ஆரஞ்சுகள் உள்ளன.
 
மூன்றாம் செங்குத்து வரிசையில் \(6\) ஆரஞ்சுகள் உள்ளன.
 
நான்காம் செங்குத்து வரிசையில் \(8\) ஆரஞ்சுகள் உள்ளன.
 
இங்கே, ஒவ்வொரு வரிசையிலும் \(2\) ஆரஞ்சுகள் கூடுகின்றன.
 
எனவே, அடுத்த வரிசையில் \(8 + 2 = 10\) ஆரஞ்சுகள் வரும்.
இவ்வாறான, அமைப்பு முறை பற்றி அறிய உதவும் கணிதத்தின் உட்பிரிவே இயற்கணிதமாகும். இன்றைய காலகட்டத்தில் இயற்கணிதமானது வங்கி, காப்புறுதி நிறுவனம், கணக்கியல், புள்ளியியல், அறிவியல், பொறியியல், உற்பத்தி மற்றும் பல துறைகளில் பயன்படுகிறது.
Example:
கீழே உள்ள அமைப்பு முறையை உற்று நோக்கி விடையளிக்கவும்.
 
\(57\), \(54\), \(51\), \(48\), _____, _____.
 
முதல் எண் \(57\), இரண்டாம் எண் \(54\), மூன்றாம் எண் \(51\), நான்காம் எண் \(48\).
 
இங்கே, ஒவ்வொரு எண்ணும் முந்தைய எண்ணை விட \(3\) குறைந்துள்ளது.
 
எனவே, அடுத்தடுத்த எண்ணைக் கண்டறிய முந்தைய எண்ணிலிருந்து \(3\)ஐக் கழிக்கவும்.
 
\(48 - 3 = 45\)
 
\(45 - 3 = 42\)
 
அமைப்புத் தொடர்: \(57\), \(54\), \(51\), \(48\), \(45\), \(42\).
எண் செயலிகளில் உள்ள அமைப்புகள்
ஏதேனும் ஓர் எண் \(\times\) \(1\) \(=\) அதே எண்
 
\(p \times 1 = p\)
 
இங்கே, '\(p\)' எண்ணும் ஆங்கில எழுத்தானது ஏதேனும் ஓர் எண்ணைக் குறிக்கின்றது. \(p \times 1 = p\) என்பது இயற்கணித முறையில் எழுதும் அமைப்பு ஆகும்.
 
இயற்கணிதத்தில், நாம் ‘\(p\)’ என்பதை மாறி என்கிறோம். மாறி என்பது ஓர் எண்ணைக் குறிக்கும் குறியீடாகும். மாறியாக நாம் எந்த ஆங்கில எழுத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
 
\(5 + 2 = 2 + 5\)
 
இதை \(m + n = n + m\) என்று எழுதலாம்.
 
\(5 \times 2 = 2 \times 5\)
 
இதை \(m \times  n = n \times  m\) என்று எழுதலாம். மேலும், \(mn = nm\) என்றும் எழுதலாம்.