PDF chapter test TRY NOW

தீக்குச்சிகளை வைத்து சில அமைப்புகளை உருவாக்குவோம்.
 
Ch3w6855png.png
 
ஒரு முக்கோணம் உருவாக்க \(3\) தீக்குச்சிகள் தேவைப்படும்.
 
இரண்டு முக்கோணம் உருவாக்க \(6\) தீக்குச்சிகள் தேவைப்படும்.
 
மூன்று முக்கோணம் உருவாக்க \(9\) தீக்குச்சிகள் தேவைப்படும்.
 
தொடர்ந்து குச்சிகளைப் பயன்படுத்தி பின்வரும் அட்டவணையை பூர்த்தி செய்யலாம்.
 
முக்கோணங்களின் எண்ணிக்கை
\(1\)
\(2\)
\(3\)
. . .
\(n\)
தேவையான தீக்குச்சிகளின் எண்ணிக்கை
\(3 \times 1 = 3\)
\(3 \times 2 = 6\)
\(3 \times 3 = 9\)
. . .
\(3 \times n = 3n\)
 
மேலே உள்ள ஆட்டவணையிலிருந்து நாம் தெரிந்து கொள்வதாவது, முக்கோணங்களின் எண்ணிக்கை \(n\) எனில், தேவையான தீக்குச்சிகளின் எண்ணிக்கை \(3n\). இங்கே, \(n\) என்பது மாறியாகும்.
 
\(n\)இன் மதிப்பு மாறும்போது \(3n\)இன் மதிப்பும் மாறுகிறது.
 
Important!
'மாறி' என்ற சொல்லுக்கு மாறக்கூடிய ஒன்று, அதாவது மாற்றம் என்று பொருள். ஒரு மாறியின் மதிப்பு நிலையானது அல்ல. இது வெவ்வேறு மதிப்பை பெற்றிருக்கும்.