PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் வாக்கியத்தை எவ்வாறு இயற்கணிதக் கூற்றாக மாற்றுவது என்பது பற்றிக் காண்போம்.
 
  
வ. எண்
  
வாய்மொழிக் கூற்று
இயற்கணிதக் கூற்று
  
1.
 
h மற்றும் 6 இன் கூடுதல்
h + 6
2.
d இலிருந்து 10 ஐக் குறைத்தல்
 
d - 10
  
  
3.
 
8 இன் m மடங்கு
8m அல்லது 8 \times m
  
4.
 
15 ஐ விட a ஆல் வகுக்க
15 \div a அல்லது \frac{15}{a}
 
5.
 
x இன் இரு மடங்கை 4 ஆல் வகுக்க
2x \div 4
Example:
பின்வரும் வாய்மொழிக்  கூற்றை இயற்கணிதக் கூற்றாக மாற்றுக.
 
1. p ஐ விட 6 அதிகம்
 
அதிகம் என்றால் இரண்டு எண்ணையும் கூட்ட வேண்டும்.
 
இயற்கணிதக் கூற்று: p + 6
 
 
2. 10 மற்றும் y இன் பெருக்கல் பலன்
 
பெருக்கல் பலன் என்றால் இரண்டு எண்ணையும் பெருக்க வேண்டும்.
 
இயற்கணிதக் கூற்று: 10y
 
 
3. a இன் 4 மடங்கை விட 2 ஆல் வகுக்க
 
மடங்கு என்றால் பெருக்க வேண்டும் மற்றும் அந்த எண்ணை 2 ஆல் வகுக்க வேண்டும்.
 
இயற்கணிதக் கூற்று: 4a \div 2