PDF chapter test TRY NOW
நாம் அமைப்புகள், மாறிகள் மற்றும் இயற்கணிதத்தில் மாறிகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொண்டோம். இப்பொழுது இயற்கணிதக் கூற்றுகளை எவ்வாறு வாக்கியமாக மாற்றுவது என்பதைப் பற்றிக் காண்போம்.
வ. எண் | இயற்கணிதக் கூற்று | வாய்மொழிக் கூற்று |
1. | x + 8 | x ஐ விட 8 அதிகம் (கூடுதல்) |
2. | y - 4 | y ஐ விட 4 குறைவு, y இலிருந்து 4 ஐக் குறைத்தல் |
3. | 5m அல்லது 5 \times m | 5 மற்றும் m இன் பெருக்கல் பலன் |
4. | 8 \div p அல்லது \frac{8}{p} | 5 ஐ விட z ஆல் வகுக்க |
5. | 2n - 3 | n இன் 2 மடங்கில் 3 குறைவு, 2 மற்றும் n இன் பெருக்கல் பலனில் 3 குறைவு |
Example:
பின்வரும் இயற்கணிதக் கூற்றை வாய்மொழிக் கூற்றாக மாற்றுக.
1. r + 12
இங்கு + குறி பயன்படுத்தப்பட்டுள்ளது.
r ஐ விட 12 அதிகம்.
2. 25 - s
இங்கு - குறி பயன்படுத்தப்பட்டுள்ளது.
25 ஐ லிருந்து s ஐ நீக்குதல்.
3. 64c + 1
இங்கு \times குறி மறைமுகமாகவும் மற்றும் + குறியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
64 மற்றும் c இன் பெருக்கல் பலனை விட 1 அதிகம்.