PDF chapter test TRY NOW

அடக்க விலை: தயாரிப்பாளர் அல்லது முகவரிடமிருந்து ஒரு விற்பனையாளர் பொருள்களை வாங்குகிறார். இது வாங்கிய விலை எனப்படும்.
 
மேலும் அவர் போக்குவரத்து, கூலி போன்றவற்றிற்குக் கூடுதலாகச் செலவிடுகிறார்.
 
முதலீடு, மூலப் பொருள்களின் விலை, வேலையாள்களின் கூலி, மின் கட்டணம், போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கியதே அடக்க விலை ஆகும்.
\text{அடக்க விலை} = \text{வாங்கிய விலை} + \text{கூடுதல் செலவுகள்'}
ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனத்தைக் கருதுவோம்.
 
இங்கு, மூலப்பொருட்களின் மீது தயாரிப்பு விலை ரூ.500.
 
இது போக்குவரத்திற்கு ரூ.100 செலவழிக்கிறது, ரூ.150 தொழிலாளர் கட்டணமாக மற்றும் ரூ.200 மின்சார கட்டணமாக செல்கிறது. இந்த செலவுகள் கூடுதல் செலவுகள்.
 
\text{அடக்க விலை (C.P.)} = \text{வாங்கிய விலை} + \text{கூடுதல் விலை}
 
= 500 + 100 + 150 + 200
 
= ரூ.950
குறித்த விலை: ஒரு விற்பனையாளர் பொருள்களை முகவரிடமிருந்து விற்பனை நிலையத்திற்கு எடுத்துச் சென்றபின் அவர் தம் விற்பனையில் இலாபம் ஈட்ட வேண்டும். எனவே, அவர் அடக்க விலையை விட அதிகமாகப் பொருளின் மீது விலையைக் குறிக்கிறார். இதுவே, குறித்த விலை எனப்படும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டில்,
 
ஒரு காலணியின் அடக்க விலை ரூ.950 என்போம். வியாபாரி ரூ.300 லாபம் சம்பாதிக்க விரும்பினால், அவர் ரூ.1250  என்பதை குறிப்பு விலையாக வைத்திருப்பார்.
 
\text{குறித்த விலை} = \text{அடக்க விலை} + \text{இலாபம்}
 
= 950 + 300
 
=1250
தள்ளுபடி: குறித்த விலையிலிருந்து நுகர்வோரை ஈர்ப்பதற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ வழங்கப்படும் விலைக்குறைப்பே தள்ளுபடி ஆகும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டில்,
 
குறித்த விலை ரூ.1250.
 
இப்போது விற்பனையாளர் ரூ.100 தள்ளுபடியை குறித்த விலையில் அளிக்க விருப்புகிறார்.
 
எனவே, தள்ளுபடி = ரூ.100
விற்பனை விலை: தள்ளுபடி இருப்பின், குறித்த விலையில் தள்ளுபடியைக் குறைத்தபின் ஒரு பொருளுக்கு வாடிக்கையாளர் செலுத்தும் தொகை விற்பனை விலை எனப்படும்.
மேற்கண்ட எடுத்டுக்கட்டின் மூலம்,
 
விற்பனையாளர் காலணியை விற்ற விலை ரூ.1150 ஆகும்.
 
\text{விற்பனை விலை} = \text{குறித்த விலை} - \text{தள்ளுபடி}
 
= 1250 - 100
 
= 1150
 
மேற்கண்ட வரையையிலிருந்து பின்வருவனவற்றைத் தீர்மானிக்கலாம்.
1. அடக்க விலையானது விற்பனை விலையை விட அதிகம் எனில் இலாபம் கிடைக்கும்.
 
எனவே, இங்கு இலாபம் =விற்பனை விலை அடக்க விலை
 
2. அடக்க விலையானது விற்பனை விலையை விட குறைவு எனில் நட்டம் கிடைக்கும்.
 
எனவே, இங்கு நட்டம் = அடக்க விலை விற்பனை விலை
 
3. அடக்க விலை = விற்பனை விலை எனில் இலாபமுமில்லை நட்டமுமில்லை.
 
4. தள்ளுபடி = குறித்த விலை விற்பனை விலை
 
5. விற்பனை விலை = குறித்த விலை தள்ளுபடி
 
6. தள்ளுபடி இல்லையெனில் குறித்த விலை = விற்பனை விலை.