PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு மனித உடல் முகம், கைகள், கால்கள் மற்றும் பலவற்றால் ஆனது.

இதைபோல் ஒரு விலைபட்டியல் கீழ்கண்ட விவரங்களை உள்ளடக்கியது ஆகும்.
1. அங்காடியின் பெயர்.
  
2. பட்டியலின் வரிசை எண்.
  
3. பட்டியல் தயாரிக்கப்பட்ட நாள்.
  
4. வாங்கப்பட்ட பொருள்களின் விவரம்.
  
5. ஒவ்வொரு பொருளின் விலை. 
  
6. வாங்கப்பட்ட பொருள்களின் மொத்த எண்ணிக்கை. 
  
7. பொருள்கள் வாங்கியதற்கான தொகை. 
  
8. வரி விவரம்
Example:
\(XYZ\) புத்தக கடை, தமிழ் நாடு
 
விலைபட்டியல் எண்: \(120\)

தேதி: \(1-12-2020\)
 
வ.எண்.
பொருட்கள்
பொருட்களின்
எண்ணிக்கை
விலை
(ரூ)
தொகை
(ரூ)
1
புத்தகம்
\(3\)
\(10\)
\(30\)
2
பேனா
\(2\)
\(5\)
\(10\)
3
பென்சில்
\(4\)
\(2\)
\(8\)
4
அழிப்பான்
\(1\)
\(7\)
\(7\)
 
மொத்த தொகை: ரூ.\(55\)
விலைபட்டியலை விரிவாக ஆராயலாம்.
கடையின் பெயர்: \(XYZ\) புத்தக கடை. இது தமிழ்நாட்டில் உள்ளது.
 
விலைபட்டியல் எண் \(120\).
 
பொருட்கள் வாங்கப்பட்ட தேதி \(1-12-2020\).
 
புத்தகம், பேனா, பென்சில், அழிப்பான் ஆகியவை வாங்கிய பொருட்கள் ஆகும்.
 
கொடுக்கப்பட்ட விலைபட்டியலில் இருந்து \(3\) புத்தகங்கள், \(2\) பேனாக்கள், \(4\) பென்சில்கள் மற்றும் \(1\) அழிப்பான் வாங்கியுள்ளனர்.
 
\(1\) புத்தகத்தின் விலை ரூ.\(10\)
 
\(1\) பேனாவின் விலை ரூ.\(5\)
 
\(1\) பென்சிலின் விலை ரூ. \(2\)
 
\(1\) அழிப்பானின் விலை ரூ. \(7\)
 
\(\text{தொகை}\) \(=\) \(\text{பொருட்களின் எண்ணிக்கை}\) \(\times\) \(\text{ஒரு பொருளின் விலை}\)
 
புத்தகங்களின் தொகை \(= 3\) \(×\) \(10 = 30\)
 
பேனாகளின் தொகை \(= 2\) \(×\) \(5 = 10\)
 
பென்சிலின் தொகை \(= 4\) \(×\) \(2 = 8\)
 
அழிப்பானின் தொகை \(= 1\) \(×\) \(7 = 7\)
 
மேலும், மொத்த தொகை \(=\) புத்தகங்களின் தொகை \(+\) பேனாக்களின் தொகை \(+\) பென்சிலின் தொகை \(+\) அழிப்பானின் தொகை.
 
\(= 30 + 10 + 8 + 7\)
 
\(= 55\)
 
எனவே, மொத்த தொகை ரூ.\(55\)
Important!
வரி விலக்குகள்: வரி என்பது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைத் தவிர வேறில்லை. இந்த பணத்தை அரசாங்கம் நாட்டை நடத்துவதற்கும் மக்களுக்கு பொது சேவைகளை வழங்குவதற்கும் பயன்படுத்துகிறது. பொது சேவைகளில் காவல்துறை, இராணுவம் மற்றும் பல உள்ளன.