PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விலைபட்டியல் சரிப்பார்த்தல்:
 
சில கேள்விகள் மூலம் விலைபட்டியலை சரிபார்க்கலாம்.
கேள்விகளை ஆராய்தல்:
 
கேள்விகளை ஆராய்வது, சிக்கலைப் பற்றிய ஆழமான அறிவைப் பெறுவதற்குப் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
Example:
1. நான் மூன்று பொருட்களையும் வாங்கியிருக்கிறேனா?
 
2. நான் சரியான தொகையை செலுத்தியுள்ளேனா?
 
3. எனக்கு சரியான தொகை திரும்ப கிடைத்ததா?
கீழே கொடுக்கப்பட்டுள்ள விலைபட்டியலை பரிசீலித்து, சில ஆய்வுக் கேள்விகளைக் கொண்டு வர முயற்சிப்போம்.
 
XYZ புத்தக கடை, தமிழ் நாடு
 
விலைபட்டியல் எண்: \(120\)
 
தேதி: \(1-12-2020\)
 
வ.எண்.
பொருட்கள்
பொருட்களின்
எண்ணிக்கை
விலை
(ரூ)
தொகை
(ரூ)
1
புத்தகம்
\(3\)
\(10\)
\(30\)
2
பேனா
\(2\)
\(5\)
\(10\)
3
பென்சில்
\(4\)
\(2\)
\(8\)
4
அழிப்பான்
\(1\)
\(7\)
\(7\)
 
மொத்த தொகை: ரூ.\(55\)
 
 
1. என்னிடம் சரியான பில் உள்ளதா?
  
ஆம்.
 
என்னிடம் \(1-12-2020\) தேதியிட்ட பில் உள்ளது, மேலும் பில் எண் \(120\) ஆகும்.
 
 
2. புத்தகத்திற்கான சரியான தொகையை நான் செலுத்தியுள்ளேனா?
 
ஆம்.
 
புத்தகங்களின் எண்ணிக்கை \(= 3\)
 
ஒரு புத்தகத்தின் விலை \(=\) ரூ.\(10\)
 
எனவே, புத்தகத்திற்கான மொத்த தொகை \(= 3\) \(×\) \(10=\) ரூ.\(30\).
 
 
3. பேனாக்களுக்கான சரியான தொகையை நான் செலுத்தியுள்ளேனா?

ஆம்.

பேனாக்களின் எண்ணிக்கை \(= 2\)

ஒரு பேனாவின் விலை \(=\) ரூ\(5\)

எனவே, பேனாக்களின் மொத்த தொகை \(= 2\) \(×\) \(5 =\) ரூ.\(10\).