PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநீங்கள் சாலையோர விற்பனையாளரிடமிருந்து சில பொருட்களை வாங்குகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்,
மேலும் விற்பனையாளர் உங்களுக்கு பில் வழங்கவில்லை. ஆனால், வீட்டிற்கு வந்த உங்கள் தந்தை வாங்கியதைச் சரிபார்க்க விலைபட்டியல் வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்களே ஒரு விலைபட்டியலை தயாரிக்கலாம்.
விலைபட்டியலைத் தயாரிக்க கீழ்கண்ட படிகளைப் பின்பற்றலாம்.
படி 1: கடையின் பெயரைக் குறிப்பிடவும்.
படி 2: உங்களின் குறிப்பிற்காக ஒரு பட்டியல் எண்ணைக் குறிப்பிடவும்.
படி 3: வாங்கிய தேதி குறிப்பிடவும்.
படி 4: வாங்கிய பொருட்களைப் பட்டியலிடவும்.
படி 5: ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிப்பிடுக.
படி 6: ஒவ்வொரு பொருளின் தொகையைக் கண்டறிக.
படி 7: மொத்த தொகையைக் குறிப்பிடவும்.
Example:
நீங்கள் \(2\) கிலோகிராம் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.\(50\), \(3\) கிலோகிராம் எலுமிச்சை ரூ.\(20\) ஒரு கிலோகிராம், \(1\) கிலோ சர்க்கரை ஒரு கிலோவுக்கு ரூ.\(60\). கடைக்காரர் உங்களுக்கு விலைபட்டியல் கொடுக்கவில்லை. எனவே வாங்கியதைச் சரிபார்க்க நீங்களே ஒரு விலைபட்டியலைத் தயாரிக்கவும்.
கடையின் பெயர் \(=\) XYZ காய்கறி கடை
விலைபட்டியல் எண் \(=\) \(120\)
தேதி \(=\) \(05-04-2020\)
பொருள் \(1 =\) வெங்காயம்
எடை (கி.கி இல்) \(= 2\)
ஒரு கி.கி வெங்காயத்தின் விலை ரூ.\(50\)
வெங்காயம் வாங்க செலுத்திய மொத்த தொகை \(=\) \(\text{எடை}\) \(×\) \(\text{விலை}\) \(= 2\) \(×\) \(50 =\) ரூ.\(100\).
பொருள் \(2 =\) எலுமிச்சை
எடை (கி.கி இல்) \(= 3\)
ஒரு கி.கி வெங்காயத்தின் விலை ரூ.\(=20\)
வெங்காயம் வாங்கிய தொகை \(=\) \(\text{எடை}\) \(×\) \(\text{விலை}\) \(= 3\) \(×\) \(20 =\) ரூ.\(60\).
பொருள் \(3 =\) தக்காளி
எடை (கி.கி இல்) \(= 1\)
ஒரு கிலோ கிராம் தக்காளியின் விலை \(=\) ரூ \(60\)
தக்காளி வாங்கிய தொகை \(=\) \(\text{எடை}\) \(\times\) \(\text{விலை}\) \(= 1\) \(×\) \(60 =\) ரூ.\(60\).
மொத்த தொகை\(=\) வெங்காயத்தின் தொகை \(+\) எலுமிச்சையின் தொகை\(+\) தக்காளியின் தொகை.
\(= 100 + 60 + 60\)
\(=220\)
எனவே, மொத்த தொகை ரூ.\(220\)
இப்பொழுது தேவையான விலைபட்டியலைக் கீழ்கண்டவாறு பெறலாம்.
XYZ காய்கறி கடை.
விலைபட்டியல் எண் \(=\) \(120\)
தேதி \(=\) \(05-04-2020\)
வ.எண் | பொருட்கள் | எடை (கி.கி) | விலை (ரூ) | தொகை (ரூ) |
1 | வெங்காயம் | \(2\) | \(50\) | \(100\) |
2 | எலுமிச்சை | \(3\) | \(20\) | \(60\) |
3 | தக்காளி | \(1\) | \(60\) | \(60\) |
மொத்த தொகை ரூ.\(=220\)