PDF chapter test TRY NOW

1. 24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
 
18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை = .
 
 
2. 15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2\frac{1}{2} \text{கி.கி} எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்?
 
2\frac{1}{2} \text{கி.கி} எடையில்  அட்டைகள் (charts) இருக்கும்.
 
 
3. அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை  ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?
 
9 நோட்டுப் வாங்க  பணம் தேவைப்படும்.
 
 
4. ஒரு மகிழுந்து 90 \text{கி.மீ} தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 \text{கி.மீ} தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
 
மகிழுந்து 210 \text{கி.மீ} தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் = .
 
 
5. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
 
42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க   நாட்கள் ஆகும்.
 
 
6. ஒரு பெட்டி தக்காளியின் விலை ₹200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ₹260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?
 
ஒரு பெட்டியின் விலை ₹260 என அதிகரித்தால் வேந்தன் அவரிடம் உள்ள பணத்தை வைத்து  பெட்டிகள் வாங்க முடியும்.