PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
எந்த முழு எண்ணுடனும் 0 (பூச்சியம்) மற்றும் 1 (ஒன்றினை)பெருக்கினால் முடிவு (அல்லது) தொகை மாறாது. இது முழு எண்களின் சமனிப் பண்பு எனப்படும்.
0 (பூச்சியம்)ன்  சமனிப் பண்பு:
 
எந்த ஒரு எண்ணுடனும் பூச்சியத்தை கூட்டினால் அல்லது கழித்தால் அதே எண் கிடைக்கும். இதுவே கூட்டல் சமனிப் பண்பு எனப்படும்.
 
a ஒரு முழு எண் என்று கருதுங்கள்:
a + 0 = a.
a − 0 = a.
Example:
i) 10 + 0 = 10.  
ii) 8 − 0 = 8.
1 (ஒன்றின்) அடையாளப் பண்பு:
1 இன் அடையாளப் பண்பு, எந்த எண்ணையும் 1 ஆல் பெருக்கினால் அல்லது வகுத்தால் அது அப்படியே இருக்கும்.
\text{a} ஒரு முழு எண் என்று கருதுங்கள்:  
(a × 1) = a
(a ÷ 1) = a
Example:
i) 10 × 1 = 10
ii) 10 ÷ 1 = 10
0 (பூச்சியம்) ஒரு கூட்டல் அடையாளம் என்றும், 1 (ஒன்று) பெருக்கல் அடையாளம் என்றும் அழைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.