PDF chapter test TRY NOW
இரண்டு முழு எண்களை கூட்டும்போது அல்லது பெருக்கும்போது , வரிசையில் ஏற்படும் மாற்றம் முடிவின் மதிப்பை (அல்லது) தொகையை மாற்றாது. இது முழு எண்களின் பரிமாற்றப் பண்பு எனப்படும்.
இந்த பண்பு கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
ஒரு எண்ணை இரண்டு எண்களின் கூடுதலோடு பெருக்கி கிடைக்கும் பெருக்குத் தொகையை, இரண்டு பெருக்குத் தொகைகளின் கூடுதலாக எழுதலாம்.
a மற்றும் b ஐ முழு எண்கள் என்று கருதுங்கள்:
(a + b) = (b + a)
(a × b) = (b × a)
Example:
i) (10 + 5) = (5 + 10) = 15
ii) 10 × 2 = 2 × 10 = 20
Important!
பரிமாற்றப் பண்பானது கழித்தல் மற்றும் வகுத்தலுக்குப் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டு முழு எண்களைக் கழித்தல் அல்லது வகுக்கும் போது, முழு எண்களின் வரிசையை மாற்றுவது முடிவை மாற்றும்.
a மற்றும் b ஆகியவை முழு எண்கள் என்று கருதுங்கள்:
(a − b) ≠ (b − a)
(a ÷ b) ≠ (b ÷ a)
Example:
i) (10 − 5) ≠ (5 − 10)
ii) (10 ÷ 5) ≠ (5 ÷ 10)