PDF chapter test TRY NOW
வடிவமைப்பின் மூலம் அட்டவணைப்படுத்துதல் பற்றி பார்க்கலாம்.
மேற்கண்ட வடிவமைப்பை அட்டவணைப்படுத்துவோம்.
\(x\) ஐ படிகள் எனவும் \(y\) சதுரங்களின் எண்ணிக்கை எனவும் எடுத்துக்கொள்வோம்.
படி\((x)\) | \(1\) | \(2\) | \(3\) | \(4\) | … |
சதுரம் \((y)\) | \(2\) | \(4\) | \(6\) | \(8\) | … |
\(x\) மற்றும் \(y\) இன் தொடர்பை காணலாம்.
\(x = 1\) எனில் \(y = 2\) அதாவது, \(y = 2 \times 1\)
\(x = 2\) எனில் \(y = 4\) அதாவது, \(y = 2 \times 2\)
\(x = 3\) எனில் \(y = 6\) அதாவது, \(y = 2 \times 3\)
\(x = 4\) எனில் \(y = 8\) அதாவது, \(y = 2 \times 4\)
எனவே, பொதுவாக \(x\) மற்றும் \(y\) இன் தொடர்பை \(y = 2x\) என்ற நேரிய சமன்பாட்டில் குறிப்பிடலாம்.