
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநினைவுறுத்தல்:
மாறிலி:
ஒரு எண்ணிற்கான மதிப்பு என்றும் மாறாமல் அதே, ஒரே மதிப்பில் நிற்கும்.
45,286,953 போன்றவை மாறிலிகள். இவற்றில் மதிப்பு வேறாக மாறாது.
மாறி:
ஒரு நிலையான மதிப்பு இல்லாத வெவ்வேறு எண் மதிப்புகளைத் தாங்கும் எழுத்தே மாறி ஆகும். பொதுவாக ஆங்கில எழுத்துக்கள் a, b, c, d, n ,m ,x, y, z ஆல் சூட்டுவோம்.
இயற்கணிதக் கோவை:
கோட்பாடு: ஒரு இயற்கணிதக் கோவை என்பது மாறிலிகள், மாறிகள் மற்றும் அதை இணைக்கும் இயற்கணித செயல்பாடுகள் சேர்ந்த ஒரு வடிவமே.
Example:
6x; 4y^2; 5x+z^2 and 1+y+y^2 ஆகியவை சில இயற்கணிதக் கோவைகள்.
ஒரு இயற்கணிதக் கோவை a+2 ஐ எடுத்துக்கொள்வோம்.
இதில் 'a' என்பது ஒரு மாறி. அதற்கு நிலையான மதிப்பு கிடையாது.
'2' என்பது மாறிலி. இதன் மதிப்பு என்றும் இரண்டு தான்.மாறாது.
'+' எனும் அடிப்படைக் கணித செயலி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

a | 2 |
மாறி | மாறிலி |
நிலையான மதிப்பு கிடையாது. | மதிப்பு என்றும் இரண்டு தான். மாறாது. |
குறிப்பு:
ஒரு மாறி ,மாறிலி கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எண்ணற்ற இயற்கணித கோவைகளை உருவாக்கலாம்.
ஒரு மாறி ,மாறிலி கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எண்ணற்ற இயற்கணித கோவைகளை உருவாக்கலாம்.