PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரே இயற்கணிதக் கோவையில் உள்ள உறுப்புகளையோ, தனித்தனி உறுப்புகளையோ கூட்டும், கழிக்கும் முறைகளை முன்னர் கண்டோம். இப்போது வெவ்வேறு முழு இயற்கணிதக் கோவைகளை கூட்டும் முறைகளைப் பற்றி இருக்கிறோம்.
தனி உறுப்புகளில் எப்படி ஒத்த உறுப்புகளை பிரித்து, அதன் எண்கெழுக்களைக் கூட்டினோமோ அதே முறை தான் கோவைகளைக் கூட்டுவதற்கும். ஆனால், உறுப்புகள் தனியாக இருக்கும் போது எந்த முறையில் வேண்டுமானாலும் அடுக்கி கூட்டலாம்.
கோவைகளைக் கூட்டும்போது அந்தந்தக் கோவைக்குள் இருக்கும் உறுப்புகளைக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வரிசைப்படுத்தி பின் கூட்டவேண்டும். அப்போது தான் ஒத்த உறுப்புகளை எளிதாகக் கூட்ட முடியும்.
கோவைகளைக் கூட்ட \(2\) வழிமுறைகள் உண்டு.
- அடுத்தடுத்துக் கிடை வரிசையாக எழுதும் முறை.
- ஒன்றின் கீழ் ஒன்றாக செங்குத்து வரிசையில் எழுதும் முறை
கிடை வரிசை முறைப்படி, இரண்டு கோவைகளையும் கிடைமட்டமாக அடுத்ததடுத்து எழுதி, அதில் ஒத்த உறுப்புகளை ஒன்றாக்கிக் கூட்ட வேண்டும்.
Example:
\(6a + 8b - 7c\), \(2b + c - 4a\) and \(a - 3b - 2c\) ஐக் கூட்டவும்.
ஒத்த உறுப்புகளை ஒன்றாக வரிசைப்படுத்தி, பின்னர் சேர்க்கவும்.
எனவே, இயற்கணிதக்கோவைகளின் கூட்டல் ஆகும்.
செங்குத்து வரிசை முறைப்படி கொடுப்பட்டுள்ள கோவைகளை ஒரே மாதிரியான வரிசையில் மாற்றியமைத்து, அவற்றை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி அவற்றின் எண்கெழுக்களைக் கூட்ட வேண்டும்.
Example:
\(6a + 8b - 7c\), \(2b + c - 4a\) and \(a - 3b - 2c\) சோ்க்கவும்.
கொடுக்கப்பட்ட கோவையின் உறுப்புகளை ஒரே வரிசையில் எழுதி, ஒன்றுக்கொன்று கீழே எழுதாவும்.
எனவே, இயற்கணித வெளிப்பாடுகளின் கூட்டுத்தொகை ஆகும்.