PDF chapter test TRY NOW
ஒரு சமன்பாடு என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளின் இரண்டு கணிதக் கோவைகள் இடையிலான சமனான நிலை .
பல நிதர்சன சூழ்நிலைகளில் எளிய நேரியல் சமன்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இது மிகவும் சிக்கலான சிக்கல்களை எளிதாகத் தீர்க்க உதவுகிறது.
ஒரு சிக்கலைத் தீர்க்க எளிய சமன்பாடுகள் எவ்வாறு உதவும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
இது மிகவும் சிக்கலான சிக்கல்களை எளிதாகத் தீர்க்க உதவுகிறது.
ஒரு சிக்கலைத் தீர்க்க எளிய சமன்பாடுகள் எவ்வாறு உதவும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
Example:
அனுவின் அப்பாவின் வயது, அனுவின் வயதின் மூன்று மடங்கை விட \(10\) வயது அதிகம். அவரது அப்பாவின் வயது \(40\) என்றால் அனுவின் வயது என்ன?
அனுவின் வயது நமக்கு தெரியாது. எனவே மாறி \('x'\) வருடங்களாக வைத்துக்கொள்வோம்.
இப்போது, அனுவின் அப்பாவின் வயது, அனுவின் வயதின் மூன்று மடங்கை விட \(10\) வயது அதிகம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
அனுவின் வயதின் மூன்று மடங்கை \(3x\) என்றுக் குறிப்பிடுவோம்.
அனுவின் வயதின் மூன்று மடங்கை விட \(10\) வயது அதிகம் என்றால் \(3x +10\). எனவே அப்பாவின் வயது \(= 10+3x\).
அப்பாவின் வயது \(40\) என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, நாம் இரு கூற்றுகளையும் சமன் செய்து \(10+3x = 40\) பெறுவோம்.
இதைத்தான் ஒரு எளிய நேரியல் சமன்பாடு என்று அழைக்கிறோம். இது சிக்கல்களை எளிதாக்கும்.
எனவே, நாம் இரு கூற்றுகளையும் சமன் செய்து \(10+3x = 40\) பெறுவோம்.
இதைத்தான் ஒரு எளிய நேரியல் சமன்பாடு என்று அழைக்கிறோம். இது சிக்கல்களை எளிதாக்கும்.
Important!
\(x\) க்கான பதில் ஒன்றாகத் தான் இருக்கும் வேறு மதிப்புகள் போட்டால் நேரியல் சமன்பாடு சமன் ஆகாது .
\(x\) க்கு வரும் ஒரே விடை தான் அந்தக் கணக்கின் சமன்பாட்டுத் தீர்வு.
\(x\) க்கு வரும் ஒரே விடை தான் அந்தக் கணக்கின் சமன்பாட்டுத் தீர்வு.