PDF chapter test TRY NOW

Maths_TM_class7_Alg.gif
 
விதி 1: அறியப்படாத அல்லது கண்டுபிடிக்கப்படாத மதிப்புக்கு ஒரு மாறி ஒதுக்க வேண்டும்..
 
சிறுவனுக்கு ஆரம்பத்தில் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை \(= x\).
 
விதி 2: பின்னர், கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி கோவைகளை உருவாக்கலாம்.
 
சகோதரிக்கு கொடுக்கப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை \(= 3\).
 
சிறுவனுக்கு மீதமுள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை \(= 2\).
 
சிறுவன்  ஆரம்பத்தில் வைத்திருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை \(-\) சிறுமிக்கு கொடுக்கப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை \(=\) சிறுவனுக்கு எஞ்சியிருக்கும் ஆப்பிள்களின் எண்ணிக்கை.
 
விதி 3:  இறுதியாக கேள்வியில் கொடுக்கப்பட்ட மதிப்புகளுடன் கோவைகளை சமன்படுத்த வேண்டும்.
 
சிறுவனுக்கு எஞ்சியிருக்கும்  ஆப்பிள்களின் எண்ணிக்கை:
 \(x-3 = 2\).

எனவே, இந்த கணக்கின் சமன்பாடு \(x−3 = 2\) ஆகும்.