PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பூமியின் நிறை உங்களுக்கு தெரியுமா?
 
பூமியின் நிறை \(5,970,000,000,000,000,000,000,000\) கிகி!
  
இந்த எண்ணை உங்களால் வாசிக்க முடியுமா?
  
இந்த பெரிய பெரிய எண்களை வாசிப்பது, புரிந்துகொள்வது மற்றும் ஒப்பிடுவது கடினம். இந்த எண்களை எளிதாகப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், ஒப்பிடவும் அடுக்குகளைப் பயன்படுத்துகிறோம்.
 
அடுக்குகளைப் பற்றி தற்பொழுது காணலாம்.
அடுக்கு என்பது ஒரு எண்ணை தானாகப் பெருக்குவதன் விளைவாகும். அடித்தளம் தன்னால் எத்தனை முறை பெருக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.
Example:
\(a^5\) என்பதை எடுத்துக்கொள்வோம்.
 
\(a^5=a \times a \times a \times a \times a\)
 
இங்கு, \(a\) என்பது அடிமானம் அல்லது அடித்தளம் மற்றும் \(5\) என்பது அடுக்கு ஆகும்.
Important!
அடுக்குகள் \(2\) மற்றும் \(3\) இக்கு முறையே ‘வர்க்கம்’, ‘கனம்’ என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு. உதாரணமாக, \(5^2\) ஆனது '\(5\) இன்வர்க்கம்’ என்றும் \(5^3\) ஆனது ‘\(5\) இன்கனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
 
அடுக்குகளை வழக்கமாக அடிமானத்தின் வலது உச்சி மூலையில், அடிமானத்துடன் ஒப்பிடும்போது அளவில் சிறியதாக இருக்குமாறு எழுத வேண்டும