PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அடுக்கு விதிகள்:
 
ஒரே அடிமானம் உள்ள அடுக்கு எண்களைப் பெருக்கவும் வகுக்கவும் உதவும் சில விதிகளைக் காண்போம்.
அடுக்கு வடிவ எண்களின் பெருக்கல்: \(a\) என்பது ஒரு பூச்சியமற்ற முழுக்கள் மற்றும் \(m\) மற்றும் \(n\) என்பன முழு எண்கள் எனில், \(a^m \times a^n=a^{m+n}\) ஆகும்.
Example:
\(2^3 \times 2^2\) இன் மதிப்பு காண்க:
 
தீர்வு:
 
\(a^m \times a^n=a^{m+n}\)
 
இங்கு, \(a=2\), \(m=3,n=2\) ஆகும்.
 
எனவே, \(2^3 \times 2^2=2^{3+2}\)
 
\(=2^5=32\)
 
எனவே, \(2^3 \times 2^2=32\)
அடுக்கு வடிவ எண்களின் வகுத்தல்: \(a\) என்பது ஒரு பூச்சியமற்ற முழுக்கள் மற்றும் \(m\) மற்றும் \(n\) என்பன முழு எண்கள் எனில், \(\frac{a^m}{a^n}=a^{m-n}\) ஆகும்.
Example:
\(\frac{2^5}{2^3}\) இன் மதிப்பு காண்க.
 
தீர்வு:
 
\(\frac{a^m}{a^n}=a^{m-n}\)
 
இங்கு, \(a=2, m=5, n=3\)
 
\(\frac{2^5}{2^3}=2^{5-3}\)
 
\(2^2=4\)
 
எனவே, \(\frac{2^5}{2^3}=4\)
அடிமானத்தில் இரண்டு அடுக்கு இருக்கும்போது மதிப்புகளைக் காணலாம்.
அடுக்கின் அடுக்கு விதி: \(a\) என்பது ஏதேனும் ஒரு பூச்சியமற்ற முழுக்கள் ஆகவும் \(m\) மற்றும் \(n\) என்பன முழு எண்கள் எனில், \((a^m)^n=a^{mn}\).
Example:
\((2^3)^2\) இன் மதிப்பு காண்க:
 
தீர்வு:
 
\((2^3)^2=2^{3 \times 2=6}\)
 
\(2^6=2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2=64\)
 
எனவே, \((2^3)^2=64\)