PDF chapter test TRY NOW
இயற்கணிதக் கோவையின் படி என்றால் என்ன ?
ஒரு கோவையின் படியை அறிவதற்கு, முதலில் ஒரு மாறியின் படியினை அடுக்கு எண்களுடன்
தொடர்பு படுத்த வேண்டும்.
மாறியின் அடுக்குகள்:
சதுரத்தின் பக்க அளவு \(x\).
சதுரத்தின் பகுதி \(= x \times x\) \(= x^2\) \(\ சதுர\).
\(x^2\) என்னும் கோவையில் ஒரு உறுப்பு உள்ளதால் அதனை ஓர் உறுப்புக் கோவை என்று அழைக்கிறோம்.
செவ்வகத்துடைய நீளம் \(l\) மற்றும் அகலம் \(b\).
செவ்வகத்தின் பகுதி \(= l \times b\) \(sq. \ units\)
\(l^1b^1\). இப்பொழுது அடுக்குகளை நாம் கூட்ட வேண்டும். அவை \(1 + 1 =2\).
\(lb\) இக் கோவையில் உள்ள அடுக்கு எண் \(2\) ஆகும்.
Example:
1. \(3y^2 + y +2\) என்ற எண்ணிற்கு இயற்கணிதக் கோவையின் படியைக் கண்டுப்பிடிக்கவும்.
விடை:
\(3y^2\) இக் கோவையில், \(y\) இன் அடுக்கு \(2\). எனவே \(3y^2\) இதன் படி \(2\) ஆகும், எனவே \(y\) இதன் படி \(1\) ஆகும்.
\(3y^2\) இதனுடைய பெரிய அடுக்கு \(2\) ஆகும்.
\(2\), இதுவே இக்கொவையின் படி ஆகும்.
2. \(2x^2 +3xy^4 +y+6\) என்ற எண்ணிற்கு இயற்கணிதக் கோவையின் படியைக் கண்டுப்பிடிக்கவும்.
விடை:
கொடுக்கப்பட்டுள்ள கோவையில் உள்ள மாறிகள் \(2x^2\), \(3xy^4\), \(y\) மற்றும் \(6\).
\(2x^2\) உடைய அடுக்கு \(2\) ஆகும்.
\(3xy^4\) இதனுடைய அடுக்கு \(1 + 4 = 5\) ஆகும்.
\(y\) உடைய அடுக்கு \(1\) ஆகும்.
\(3xy^4\) இதனுடைய பெரிய அடுக்கு \(5\) ஆகும்.
\(5\) இதுவே இக் கோவையின் படி ஆகும்.