PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமாறிகளையும், மாறிலிகளையும், கூட்டல் மற்றும் கழித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் இணைத்து இயற்கணிதக் கோவைகள் உருவாக்கப்படுகின்றன.
1. ஈருறுப்புக் கோவை என்றால் என்ன?
ஓர் இயற்கணிதக் கோவையில் \(2\) உறுப்புகள் உள்ள கோவை ஈருறுப்புக் கோவை என்று அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக, \(6y + 2\) என்னும் கோவை \(6y\),\(2\) என்னும் இரண்டு பகுதிகளின் கூடுதலினால்
கிடைக்கப் பெறுகிறது. இந்தப் பகுதிகளே, ஒரு கோவையின் உறுப்புகள் எனப்படும்.
கிடைக்கப் பெறுகிறது. இந்தப் பகுதிகளே, ஒரு கோவையின் உறுப்புகள் எனப்படும்.
இங்கு \(6y\) என்பது மாறி உறுப்பு; \(y\) என்பது மாறிலி \(6\) என்பது மாறியின் கெழு மற்றும் \(2\) மாறிலி.
2. ஒத்த உறுப்புகள் என்றால் என்ன?
ஒரே மாறியைக் கொண்டுள்ள உறுப்புகள் ஓத்த உறுப்புகள் ஆகும்.
இங்கு \(6y\), \(3y\), \(10y\) என்பவை ஓத்த உறுப்புகளின் எடுத்துக்காட்டு ஆகும்.
3. மாறுப்பட்ட உறுப்புகள் என்றால் என்ன?
மாறிகள் வேறுப்பட்டாலோ அல்லது மாறி மற்றும் மாறிலி வெவ்வேறானவையாக இருந்தாலோ அது மாறுப்பட்ட உறுப்புகள் ஆகும்.
இங்கு \(-5x\), \(-3y\) என்பவை மாறுப்பட்ட உறுப்புகளின் எடுத்துக்காட்டு ஆகும்.
ஓத்த உறுப்புக்களைக் கூட்டினாலோ அல்லது கழித்தாலோ நமக்கு ஒரு புதிய உறுப்பு கிடைக்கும் ஆனால் மாறுப்பட்ட உறுப்புகளை கூட்டினாலோ அல்லது கழித்தாலோ நமக்கு ஒரு புதிய பண்பு கிடைக்கும் .
எடுத்துக்காட்டு:
\(3x\) மற்றும் \(4x\) என்ற ஒத்த உறுப்புகள் அதனுடைய கூட்டல் \(3x + 4x = 7x\) என்ற புதிய உறுப்பு கிடைக்கும்.
\(6x\) மற்றும் \(2y\) என்ற மாறுப்பட்ட உறுப்புகள் அதனுடைய கூட்டல் \(6x + 2y\) என்ற புதிய பண்பு கிடைக்கும்.