PDF chapter test TRY NOW
உங்கள் அன்றாட வாழ்வில் தெருவிளக்கு, மின் இணைப்பு மற்றும் பிரமாண்டமாக கட்டப்பட்ட கட்டிடத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் கூர்ந்து கவனித்தால், இந்த கட்டுமானங்களில் ஒரு குறுக்குவெட்டிக் கோடுகளை பார்க்கலாம்.
Example:
மின் இணைப்பு ஒரு குறுக்கு வெட்டியை உருவாக்குகிறது.
இரு கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு குறுக்குவெட்டி எனப்படும்.
இங்கே, \(m\), \(n\) ஆகியவை இரு இணையற்ற கோடுகள் மற்றும் \(l\) என்பது இரு கோடுகளை \(A\), \(B\) என்ற இரு புள்ளிகளில் குறுக்காக வெட்டும் கோடு.
\(l\) ஆனது இரு கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுவதால் அக்கோடுகளின் குறுக்கு வெட்டி எனப்படும்.
பின்வரும் இரு படங்களிலும் \(l\) என்பது மற்ற கோடுகளுக்குக் குறுக்குவெட்டியாக அமையுமா எனச் சரிபார்க்க.
மேலே உள்ள படங்களில் \(l\) ஆனது ஒரு குறுக்கு கோடு அல்ல. ஏனெனில் \(l\) மற்ற கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுவதில்லை. எனவே, இது ஒரு குறுக்குக்கோடு அல்ல.