PDF chapter test TRY NOW
முக்கோணத்தின் கோணத்திற்கு இடையேயுள்ள தொடர்பைக் குறிக்கும் முக்கிய பண்பைக் காணலாம்.
முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் \(180^°\).
Example:
\(∠1\), \(∠2\) மற்றும் \(∠3\) என்ற கோணங்களை \(ABC\) என்ற முக்கோணத்தை எடுத்துக்கொள்வோம். \(BC\) க்கு இணையாக \(DE\) என்ற நேர்க்கோடு வரைக.
இணைகோடு \(DE\) முக்கோணம் \(ABC\) உடன் ஏற்படுத்தும் கோணம் \(∠4\) மற்றும் \(∠5\) என்க.
\(DE\) மற்றும் \(BC\) இணை.
எனவே, ஒன்றுவிட்ட கோணங்கள் \(∠2\) மற்றும் \(∠4\) சமம்.
இதைபோல், \(∠3\) மற்றும் \(∠5\) சமம்.
மேலும், \(∠5 + ∠CAD = 180^°\)
அதாவது, \(∠5 + ∠1 + ∠4 = 180^°\)
எனவே, \(∠1 + ∠2 + ∠3 = 180^°\).
இதிலிருந்து முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் \(180^°\) என்பதை அறியலாம்.