PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரண்டு பக்க அளவுகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கு இடைப்பட்ட
கோணம் கொடுக்கப்பட்டிருத்தல்
இரண்டு பக்க அளவுகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் கொடுக்கப்பட்டிருத்தால் முக்கோணம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(AB = 5\) செ.மீ, \(AC = 4\) செ.மீ, மற்றும் \(\angle{CAB} = 60^\circ\) அளவுகளைக் கொண்ட முக்கோணம் வரைக.
உதவிப்படம்:
வரைமுறை:
படி 1: \(AB = 5\) செ.மீ உள்ளவாறு ஒரு நேர்க்கோடு வரைக.
படி 2: \(A\) இல் \(AB\) உடன் \(60^°\) கோணத்தை அமைக்குமாறு ஒரு கதிரை வரைக.
படி 3: \(A\) ஐ மையமாகக் கொண்டு \(4\) செ.மீ ஆரம் கொண்ட வட்ட வில்லைக் கதிரை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளியை \(C\) எனக் குறிக்க.
படி 4: \(AC\) மற்றும் \(BC\) ஐ இணைக்க. \(ABC\) என்பது தேவையான முக்கோணம் ஆகும்.