PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. இடம்பெயர்தல் முறையில் மறைகுறியாக்கம்:
சீசர் மறைகுறியீடு:
சீசர் மறைகுறியீடு என்பது, ஆரம்பகாலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் எளிமையான
மறைகுறியீடு முறை ஆகும். சாதாரண உரையின் ஒவ்வோர் எழுத்தையும் ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையில் இடம்பெயர்த்து குறியீடாக மாற்றி எழுதும் முறையாகும்.
Example:
"mathematics" என்ற வார்த்தையை \(2\) இடப்பெயர்வு மூலம் மறைவு வார்த்தை உருவாக்கலாம்.
சாதாரண உரை | மறைகுறியீடு உரை |
\(m\) | \(O\) |
\(a\) | \(C\) |
\(t\) | \(V\) |
\(h\) | \(J\) |
\(e\) | \(G\) |
\(m\) | \(O\) |
\(a\) | \(C\) |
\(t\) | \(V\) |
\(i\) | \(K\) |
\(c\) | \(E\) |
\(s\) | \(U\) |
எனவே, \(+2\) அட்டவணைத் தொகுபைப் பயன்படுத்தி கிடைக்கப்பெற்ற வார்த்தை "OCVJGOCVKEU".
2. பிரதியிடுதல் முறையில் மறைகுறியாக்கம்:
இந்த முறையில் தகவலை க் குறியாக்கம் அல்லது குறிவிலக்கம் செய்வதற்கு, உரையின்
ஒவ்வோர் எழுத்தும் படங்களாகவோ, குறியீடுகளாகவோ, குறிப்புச் செய்தியாகவோ, குறிப்பிட்ட
எழுத்துக்களின் தொகுப்பா கவோ, எழுத்துக்களாகவோ அல்லது அவற்றின் கலவையாகவோ
மாற்றியமைக்கப்படுகிறது.
Example:
"orange", "apple" என்ற இரு எழுத்துகள் கீழ்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
மேலே உள்ள மறைகுறியாக்கப்பட்ட குறியீடுகளைக் கவனியுங்கள். ஒவ்வொரு எழுத்தும் குறிப்பிட்ட எழுத்துக்களுக்கு ஒத்திருக்கிறது. அனைத்து சொற்களும் குறிப்பிட்ட சொற்களாக மாற்றப்படுகின்றன. அதாவது, "\(a\)" எழுத்து "\(g\)" ஆகவும், "\(e\)" எழுத்து "\(n\)" ஆகவும் மாற்றப்படுகிறது.
மேற்கண்ட குறியீடு மூலம் "grape" ஐ "togcn" என மாற்றி அமைக்கலாம்.