PDF chapter test TRY NOW
தகவல் பாதுகாப்பு என்பது முக்கியமான பங்கினை வகிக்கிறது. குறியாக்கவியல்என்பது பாதுகாப்பான வடிவில் தகவல் தொடர்பினை மேற்கொள்ள செய்யும் அறிவியல் என வரையறுக்கலாம்.
இன்றைய உலகில், தகவல் பாதுகாப்பு என்பது இராணுவம், அரசியல் போன்ற துறைகளுக்கு
மட்டுமல்லாமல் தனியார் தகவல் தொடர்புக்கும் ஓர் அடிப்படைத் தேவையாக உள்ளது. மேலும், நிதிசார்
தகவல் பரிமாற்றம், படச்செயலாக்கம், தொடுஉணர்வு கருவி மற்றும் மின் வணிகப்
பரிவர்த்தனை போன்ற செயல்பாடுகளில் தகவல் தொடர்பின் பயன்பாடு இப்போது அதிகரித்துள்ளதால்,
தகவல் பாதுகாப்பு என்பது முக்கியமான பங்கினைவகிக்கிறது.
சாதாரண உரை: நடைமுறை வடிவில் உள்ள உண்மைச் செய்தியே சாதாரண உரை என்று அழைக்கப்படுகிறது.
மறைகுறியீடு உரை அல்லது மறைகுறியீடு எண்: மறைகுறியீடாக மாற்றப்பட்ட இரகசிய செய்தியானது மறைகுறியீடு உரை அல்லது மறைகுறியீடு எண்என அழைக்கப்படுகிறது. மறைகுறியீடு உரையானது ஆங்கில பெரிய எழுத்துகளாலும், சாதாரண உரையானது ஆங்கிலச் சிறிய எழுத்துகளாலும் எழுதப்படுவது வழக்கமாகும்.
இரகசியக்குறிப்பு: இரகசியக்குறிப்பு என்பது, சாதாரண உரையிலிருந்து மறைக்குறியீடாக மாற்றுவதற்கு பயன்படும் கருவியாகும்.