PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இயற்கையின் அழகான வடிவங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் எவ்வாறு கணிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து முந்தைய வகுப்புகளில் கற்றுக் கொண்டோம்.
 
இவ்வகுப்பில், நம்மைச் சுற்றியுள்ள பொருள்களில், உடல் மற்றும் உயிரியல் அமைப்புகளில் கணிதம் எவ்வாறு அழகாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
பிபனோசி எண்கள்:
பிபனோசி எண் தொடர் வரிசை கீழ்கண்டவாறு அமையும்.

0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144…,
இத்தாலி நாட்டைச் சார்ந்த பிபனோசி (இயற்பெயர் லியோனார்டோ பொனாச்சி) என்ற கணிதவியலார் பிபனோசி எண் தொடரை உருவாக்கினார.
 
Kartick dutta artist Shutterstock.jpg
பிபனோசி எண் வரிசை:
பிபனோசி  எண் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது எண்கள் முறையே 0 மற்றும் 1 ஆகும். அதற்கு அடுத்துள்ள எண்கள் முதல் இரண்டு எண்களின் கூடுதல் ஆகும்.
அதாவது, பிபனோசி வரிசையின் முதல் இரண்டு எண்கள் 0 மற்றும் 1. எனவே, மூன்றாவது எண் 0 + 1 = 1.
 
மேலும், நான்காவது எண்  1 + 1 = 2 ஆகும்.
 
எனவே, பிபனோசி எண் தொடரின் பொதுவடிவத்தை F(n)= F(n–1) + F(n–2) என எழுதலாம்.
 
இங்கு, F(n) ஆனது nவது உறுப்பு.
 
n = 5 எனில்,
 
F(5) = F(5–1) + F(5–2)
 
F(5) = F(4) + F(3)
 
F(5) = F(4) + F(3)
 
F(5) = 2 + 3 = 5.
 
எனவே, மேற்கண்ட பொது வடிவம் மூலம் பிபனோசி எண் தொடர் எண்களை அறியலாம்.