PDF chapter test TRY NOW
ஒரு முப்பரிமாண பொருளை கிடைமட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ வெட்டும்போது நாம் பெறும் வடிவமே அப்பொருளின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஆகும்.
கூம்பின் குறுக்குவெட்டுத் தோற்றம்:
இரண்டு வகையான குறுக்குவெட்டுத் தோற்றங்கள் உள்ளன. அவை:
- கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம்
- செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம்
கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம்:
ஒரு திண்ம வடிவத்தை ஒரு சமதளவுரு கிடைமட்டமாக வெட்டும் போது கிடைக்கும் உருவமே கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம்.
எ .கா: உருளையை கிடைமட்டமாக வெட்டும்போது வட்டம் கிடைக்கும்.
செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம்:
ஒரு திண்ம வடிவத்தை ஒரு சமதளவுரு செங்குத்தாக (நேராக)வெட்டும் போது கிடைக்கும் உருவமே செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம்.
எ .கா: உருளையை செங்குத்தாக வெட்டும்போது செவ்வகம் கிடைக்கும்.
கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம் | செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம் |