PDF chapter test TRY NOW

வட்டம் என்பது ஒரு தளத்திலுள்ள ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தொலைவில் நகரும் புள்ளியின் நியமப்பாதை ஆகும். இதற்கு மூலைகள் மற்றும் பக்கங்கள் கிடையாது.
 
1_15.png
வட்டத்தின் பகுதிகள்
பெயர்
வட்டத்தின் பாகங்கள்
விளக்கம்
ஆரம்
3_10.png
வட்ட மையத்திலிருந்து வட்டத்தின் விளிம்பைத் தொடும் சம தொலைவுள்ள கோட்டுத்துண்டு ஆரம் எனப்படும்.
நாண்
5_7.png
வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு நாண் எனப்படும். ஒரு நாண் வட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஒரு நாண் வட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பகுதியும் வட்டத்துண்டு எனப்படுகிறது.
விட்டம்
4_8.png
வட்டத்தின் மையப்புள்ளி வழியே செல்லும் நாண்  விட்டம் ஆகும். ஒரு வட்டத்தின் விட்டமானது, அந்த வட்டத்தை இரு சம அளவுள்ள வட்டத்துண்டுகளாகப் பிரிக்கிறது. மேலும், ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் விட்டம் ஆகும்.
சுற்றளவு
2_13.png
ஒரு முழுச்சுற்றில் கடக்கும் தூரம் அதன் சுற்றளவு ஆகும்.
வட்டத்துண்டுகள்
6_4.png
ஒரு நாண் வட்டத்தினை இரு துண்டுகளாகப் பிரிக்கும். சிறிய வட்டவில்லினைத் தாங்கும் வட்டப்பகுதி "சிறிய வட்டத்துண்டு" என்றும், பெரிய வட்டவில்லினைத் தாங்கும் வட்டப்பகுதி "பெரிய வட்டத்துண்டு" என்றும் அழைக்கப்படுகிறது.
வட்ட வில்
8_5.png
ஒரு வட்டத்தின் வட்டப் பரிதியின் ஒரு பகுதியே வட்டவில் ஆகும். AB.
வட்ட கோணப்பகுதி
Circle.png
ஒரு வட்டத்தின் இரண்டு ஆரங்களாலும், அந்த ஆரங்களால் வட்டப்பரிதியில் வெட்டப்படும் வில்லாலும் அடைபடும் சமதளப்பகுதி வட்டக்கோணப்பகுதி ஆகும்.