PDF chapter test TRY NOW
அன்றாட வாழ்க்கையில் வர்க்கங்களின் தோராய மதிப்பறிதல் பயன்பாட்டை பற்றி அறிதல்:
இதனை ஒரு எடுத்துக்காட்டோடு நாம் பார்க்கலாம்:
ஒரு குடும்பத்தின் மொத்த செலவு 12990.
ஒரு குடும்பத்தில் தோரயமான செலவு 13000.
மேலே உள்ள இரண்டு வாக்கியங்கள் பற்றி என்ன நினைக்குறீர்கள்?
இரண்டு வாக்கியங்களின் அர்த்தமும் ஒன்று தானே?
தோரயமாக சொல்லும்போது நாம் அந்த எண்ணை முழுமையாக்கி சொல்வது வலக்கம்.
இதைபோல் நாம் வர்க்கமூலத்தையும் முழுமையாக்க முடியும்.
எண் முழு வர்க்க எண்ணாக இல்லாமல் இருந்தால். நாம் அந்த எண்ணிற்கு தோரயமான வர்க்க மூலத்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.

Example:
\sqrt{78} என்ற எண்ணிற்கு தோராயமான மதிப்பை கண்டறியவும்:
78 என்ற எண்ணிற்கு நெருங்கிய முழு வர்க்க எண்கள் 64 மற்றும் 81 ஆகும்.
\sqrt{64} = 8 மற்றும் \sqrt{81} = 9
எண் 78 , 64 மற்றும் 81 இரண்டு எண்ணிற்கு நடுவில் உள்ளது.
\Rightarrow 64 < 78 < 81
\Rightarrow \sqrt{64} < \sqrt{78} < \sqrt{81}
\Rightarrow \sqrt{8^2} < \sqrt{78} < \sqrt{9^2}
\Rightarrow 8 < \sqrt{78} < 9 (வர்க்கமும் வர்க்க மூலமும் அடிப்பட்டுவிடும்)
இங்கு, 78 என்பது 81 என்ற எண்ணின் அருகில் உள்ளது, அது 9 என்ற எண்ணின் வர்க்கம் ஆகும்.
ஆதலால், 78 என்ற எண்ணின் தோராய வர்க்க மூலம் 9 ஆகும்.