PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநீள் வகுத்தல் முறையில் ஓர் எண்ணின் வர்கமூலத்தைக் காணலாம்:
படி 1: ஒன்றுகள் இடத்தில் உள்ள இலக்கம் தொடங்கி, இலக்கங்களைச் சோடியாக்கவும். ஒவ்வொரு சோடியும் மீதமுள்ள இலக்கமும் (ஏதேனும் இருப்பின் ) அது ஒரு காலக் கட்டம் எனப்படும்..
கொடுக்கப்பட்ட எண்ணின் வலது புறத்தில் இருந்து ஒரு சிறுக்கோட்டுதுண்டினை ஒவ்வொரு சோடியின் மீதும் இடவேண்டும்.
எண் ஒற்றை படை எண்ணாக இருந்தால், இடதுப்புற கடைசி இலக்கத்தின் மீது சிறுக்கோட்டுதுண்டு இருக்காது .
எடுத்துக்காட்டு , \(2 \ \overline{34}\).
படி 2: முதல் காலக் கட்டத்திலுள்ள எண்ணை விடச் சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மிகப் பெரிய எண்ணின் வர்க்கத்தைச் சிந்திக்கவும் .
அந்த எண்ணை வகுத்தியாகவும் ஈவு ஆகவும் எடுத்துக்கொள்ளவும்.
படி 3: முதல் காலக் கட்டத்திலுள்ள வகுத்தியும் ஈவையும் பெருக்க வேண்டும் பிறகு அடுத்த காலக்கட்டத்தில் உள்ள இவை கீழே இறக்க வேண்டும் அதுவே புது வகுபடு எண்ணாகும்.
படி 4: புதிய வகுத்தியைக் காண , முன்பு பெற்ற ஈவை 2 ஆல் பெருக்க வேண்டும் .
மேலும் அதனருகே சிறு இடத்தை விட வேண்டும் .
படி 5: படிகள் \(2\), \(3\) மற்றும் \(4\) ஐ திரும்ப திரும்ப பயன்ப்படுத்த வேண்டும்.
இறுதில் கிடைக்கும் ஈவே கொடுத்த எண்ணின் வர்க்க மூலமாகும் .
Example:
\(65536\) என்ற என்னிணிற்கு வர்கமூலத்தை கண்டறிதல்.
விடை:
படி 1:ஒன்றுகள் இடத்தில உள்ள இலக்கம் தொடங்கி, இலக்கங்களைச் சோடியக்கவும்.
இலக்கங்களின் சோடிகளின் மீது சிறுக்கோட்டுத்துண்டினை பயன்படுத்த வேண்டும்.
கொடுத்த எண் ஒற்றை படி எண் அதனால் இடதுப்புற கடைசி இலக்கத்தின் மீது சிறுக்கோட்டுதுண்டு இருக்காது.
அதாவது, \(6 \ \ \overline{55} \ \ \overline{36}\).
படி 2: இடதுப்புற கடைசி இலக்க எண் \(6\).
அந்த எண்ணை வக்குதியாகவும் ஈவு ஆகவும். எடுத்துக்கொள்ளவும்.
படி 3:முதல் காலக் கட்டத்திலுள்ள வகுத்தியும் ஈவையும் பெருக்க வேண்டும்.
பிறகு அடுத்த காலக்கட்டத்தில் உள்ள கீழே இறக்க வேண்டும்.
எனவே \(255\) என்பது புது வகுபடு எண்ணாகும்.
படி 4: புதிய வகுத்தியைக் காண , முன்பு பெற்ற ஈவு \((2)\) ஐ \(2\) ஆல் பெருக்க வேண்டும்.
மேலும் அதனருகே சிறு இடத்தை விட வேண்டும்.
படி 5:படிகள் \(2\), \(3\) மற்றும் \(4\) ஐ திரும்ப திரும்ப பயன்ப்படுத்த வேண்டும்.
இறுதில் கிடைக்கும் ஈவே கொடுத்த எண்ணின் வர்க்க மூலமாகும் இங்கு புதிய வகுத்தியான \(4\) உடன் ஓர் இலக்கம் சேரும்.
புதிய ஈவுடன் புதிய வகுத்தியைப் பெருக்கினால் அது \(255\) ஐ விடக் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்படி இந்த இலக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது \(225\) என்ற எண்ணை \(255\) எண்ற எண்ணிலிருந்து கழிக்க வேண்டும்.
அடுத்து, அடுத்த காலக் கட்டத்தில் உள்ள எண்களை கீழே இறக்க வேண்டும் எனவே \(3036\) என்பது புதிய வகுபடு எண்ணாகும்
புதிய வகுத்தியைக் காண , முன்பு பெற்ற ஈவு \((25)\) ஐ \(2\) ஆல் பெருக்க வேண்டும்.
மேலும் அதனருகே சிறு இடத்தை விட வேண்டும் .
அதனை கழித்தால் நமக்கு கிடைக்க கூடிய ஈவானது \(0\) ஆகும்.
எனவே, \(\sqrt{65536}\) \(=\) \(256\).