PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. எண் \(21\)-ன் கனத்தைக் காண்க.
தீர்வு:
ஒரு எண்ணை அந்த எண்ணால் பெருக்கி மீண்டும் அதே எண்ணால் பெருக்குவதன் மூலம் கிடைக்கும் எண் ஆனது அதன் கன எண் ஆகும்.
\(21 = 21 \times 21 \times 21 = 9261\)
ஆகவே, \(21\)-ன் கனம் ஆனது \(9261\) ஆகும்.
2. \(625\) ஒரு முழு கன எண் ஆகுமா? இல்லையெனில் \(625\) உடன் மிகச் சிறிய எண்ணைப் பெருக்குவதன் மூலம் ஒரு முழு கன எண்ணாக மாற்றுக.
தீர்வு:
\(625 = (5 \times 5 \times 5) \times 5\)
\(625\)-இன் பகாக் காரணிகளை மூன்றன் தொகுதிகளாகப் பிரித்தால், \(5\) மட்டும் மீதமாக இருக்கும்.
ஆகவே, \(625\) ஒரு முழு கன எண் அல்ல.
அதை முழு கன எண்ணாக மாற்ற நமக்கு மேலும் இரண்டு \(5\) தேவை.
ஆகவே, \(625\)-ஐ ஒரு முழு கன எண்ணாக மாற்ற இருபுறமும் \(5 \times 5\)-ஆல் பெருக்க வேண்டும்.
\(625 \times 5 \times 5 = (5 \times 5 \times 5) (\times 5\times 5 \times 5)\)
\(625 \times 5 \times 5 = 15625\)
இப்போது, \(15625\) ஆனது ஒரு முழு கன எண்ணாகும்.
3. \(243\) ஒரு முழு கன எண் ஆகுமா? இல்லையெனில் \(243\) உடன் எந்த மிகச் சிறிய எண்ணை வகுத்தால் ஒரு முழு கன எண்ணைப் பெறலாம்?
தீர்வு:
\(243 = (3 \times 3 \times 3) \times 3 \times 3\)
\(243\)-இன் பகாக் காரணிகளை மூன்றன் தொகுதிகளாகப் பிரித்தால், \(3 \times 3\) மட்டும் மீதமாக இருக்கும்.
ஆகவே, \(243\) ஒரு முழு கன எண் அல்ல.
ஆகவே, \(243\)-ஐ ஒரு முழு கன எண்ணாக மாற்ற, அந்த எண்ணை மீதமான காரணியால் வகுக்க வேண்டும்.
ஆதலால், வகுக்க வேண்டிய மிகச் சிறிய எண் \(9\) மற்றும் \(27\) முழு கன எண் ஆகும்.