PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் முந்தைய வகுப்புகளில் கனத்தை குறித்து அறிந்திருக்கிறோம். கனம் என்பது ஓரு முப்பரிமாண தோற்றம் ஆகும். 
 
நினைவுபடுத்துதல்:
கனம் என்பது மூன்று பக்கங்களிலும் சம அளவைக் கொண்ட முப்பரிமாண தோற்றம் ஆகும்.
  
cube_vol (1).png
ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கி, மீண்டுமொருமுறை அதே எண்ணால் பெருக்கினால் கிடைப்பது கன எண் ஆகும். இதை முழு கன எண் எனவும் கூறலாம். அதாவது, மூன்று ஒரே சம எண்களின் பெருக்கல் பலன் அந்த எண்ணின் கன எண் ஆகும். ஓர் எண்ணானது a எனில், அதன் கனத்தை a^3 எனக் குறிப்பிடுவோம்.
Example:

எண் 3-ன் கன எண்ணைக் காண்க.

 
இங்கே, a = 3.
 
a^3 = 3^3
 
= 3 \times 3 \times 3 = 27
 
எனவே, 27 என்பது எண் 3 -ன் கன எண் ஆகும்.
முதல் இருபது எண்களுக்கான கன எண்ணானது கீழ்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
 
எண்
கன எண்
எண்
கன எண்
1
1^3 = 1
11
11^3 = 1331
2
2^3 = 8
12
12^3 = 1728
3
3^3 = 27
13
13^3 = 2197
4
4^3 = 64
14
14^3 = 2744
5
5^3 = 125
15
15^3 = 3375
6
6^3 = 216
16
16^3 = 4096
7
7^3 = 343
17
17^3 = 4913
8
8^3 = 512
18
18^3 = 5832
9
9^3 = 729
19
19^3 = 6859
10
10^3 = 1000
20
20^3 = 8000