PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoImportant!
அமெரிக்காவில், அறிவியல் வடிவம் என்பது அறிவியல் குறியீடாக மட்டுமே அறியப்படுகிறது. இருப்பினும், இங்கிலாந்தில், அறிவியல் வடிவம் என்பது திட்டக் குறியீடு மற்றும் அறிவியல் குறியீடு என அழைக்கப்படுகிறது.
நாம் பிரிட்டன் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினாலும், தமிழ்நாடு புத்தகத்தின் நிலைத்தன்மையைப் பராமரிக்க, எண் வடிவத்தை திட்டக் குறியீடாகவும், அறிவியல் வடிவத்தை அறிவியல் குறியீடாகவும் கருதுகிறோம்.
நாம் பிரிட்டன் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினாலும், தமிழ்நாடு புத்தகத்தின் நிலைத்தன்மையைப் பராமரிக்க, எண் வடிவத்தை திட்டக் குறியீடாகவும், அறிவியல் வடிவத்தை அறிவியல் குறியீடாகவும் கருதுகிறோம்.
திட்டக் குறியீட்டில் உள்ள எண் என்பது நாம் வழக்கமாக எழுதும் எண்ணாகும்.
Example:
எண் \(256\)-ன் திட்ட வடிவம்.
அறிவியல் குறியீடு
\(k \times 10^n\) என எழுதும் போது ஒரு எண் அறிவியல் வடிவத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது, இங்கு \(1 \le k <10\) மற்றும் \(n\) என்பது ஒரு முழு எண். அறிவியல் குறியீடானது மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய எண்ணை ஒரு சிறிய வடிவத்தில் எழுத உதவுகிறது.
Example:
எண் \(256\)-ன் அறிவியல் குறியீடு.
அறிவியல் குறியீட்டில் எண்ணை எழுதுவதற்கான வழிமுறைகள்:
படி 1: ஓர் எண்ணை அறிவியல் குறியீட்டில், ஓர் எண்ணுடன் (முழுக்கள் அல்லது தசம எண்கள்) 10 இன் படியாக பெருக்கி எழுதவும் .
படி 2: நகர்த்தப்பட்ட படிகளின் எண்ணிக்கை \(10\) இன் அடுக்காக எடுக்கவும்.
படி 3: கொடுக்கப்பட்ட எண்ணின் அதிக இட மதிப்புக்குப் பின்னாக தசமப் புள்ளியை நகர்த்தவும்.
படி 4 : தசம புள்ளியை முன்பாகவோ அல்லது பின்னாகவோ எத்தனை இடங்கள் நகரத்தினோம் என்பதை வைத்து, \(10\) இன் படியை கூட்டவும்.
படி 5: தசம இடத்தை வலது பக்கம் நகர்த்தினால், அடுக்கானது எதிர்மறை அடுக்காக இருக்கும். தசம இடத்தை இடது பக்கம் நகர்த்தினால், அடுக்கானது நேர்மறை அடுக்காக இருக்கும்.
Example:
1. எண் \(5624.032\) இன் அறிவியல் வடிவத்தை எழுதவும்.
தசம இடத்தை \(5\)க்குப் பிறகு நகர்த்தவும்(இடது பக்கம் ).
நகர்த்த வேண்டிய படிகளின் எண்ணிக்கை \(=\) \(3\)
\(5624.032\) \(=\) \(5.624032 \times 10^3\).
2. \((3.7 \times 10^{-5}) (3 \times 10^{-3})\) இன் அறிவியல் வடிவத்தை எழுதவும்.
\((3.7 \times 10^{-5}) (3 \times 10^{-3})\) \(=\) \((3.7 \times 3) \times (10^{-5-3})\)
\(=\) \(11.1 \times (10^{-8})\)
\(=\) \(1.11 \times (10^{-8 + 1})\)
இங்கே, ஒரு தசம இடம் இடது பக்கம் நகர்த்தப்பட்டது, எனவே \(1\) ஆனது \(10\) இன் அடுக்குடன் சேர்க்கப்பட்டது.
\(=\) \(1.11 \times (10^{-7})\)
ஆகவே, \((3.7 \times 10^{-5}) (3 \times 10^{-3})\) \(=\) \(1.11 \times 10^{-7}\).
3. \((3.7 \times 10^{5}) (3 \times 10^{3})\)இன் அறிவியல் வடிவத்தை எழுதவும்.
\((3.7 \times 10^{5}) (3 \times 10^{3})\) \(=\) \((3.7 \times 3) \times (10^{5 + 3})\)
\(=\) \(11.1 \times (10^{8})\)
\(=\) \(1.11 \times (10^{8+1})\)
இங்கே, ஒரு தசம இடம் இடது பக்கம் நகர்த்தப்பட்டது, எனவே \(1\) ஆனது \(10\) இன் அடுக்குடன் சேர்க்கப்பட்டது.
\(=\) \(1.11 \times 10^{9}\)
ஆகவே, \((3.7 \times 10^{5}) (3 \times 10^{3})\) \(=\) \(1.11 \times 10^{9}\).
Important!
1. அறிவியல் வடிவில் உள்ள நேர்மறை அடுக்குகள் இது ஒரு பெரிய எண் என்பதைக் குறிக்கிறது.
2. அறிவியல் வடிவில் உள்ள எதிர்மறை அடுக்குகள் இது ஒரு சிறிய எண் என்பதைக் குறிக்கிறது.