PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பெருக்கல் விதி
இந்த விதியின்படி, ஒரே அடிமான எண்களைக் கொண்ட இரண்டு படி எண்களைப் பெருக்கும் போது, அதின் அடுக்குகளைக் கூட்டலாம்.
 
\(a^{m} \times a^{n} = a^{m + n}\), இங்கே, \(a \ne 0\) மற்றும் \(a\), \(m\), \(n\) முழுக்கள் ஆகும்.
Example:
1. \(3^4 \times 3^2\)
 
இங்கே, அடிமானம் \(3\) ஆனது இரண்டு எண்களிலும் சமமாக உள்ளது. எனவே, அடுக்குகளை நாம்
கூட்டலாம்.
 
\(a^{m} \times a^{n} = a^{m + n}\)
 
\(3^4 \times 3^2 = 3^{4 + 2} = 3^{6}\)
 
 
2. \(5^{-4} \times 5^{-2}\)
 
முறை I:
 
\(5^{-4} \times 5^{-2}\) \(=\) 154×152
 
\(=\) 154×52
 
\(=\) 154+2 \(=\) 156 \(=\) \(5^{-6}\)
 
எனவே, \(5^{-4} \times 5^{-2}\) \(=\) \(5^{-6}\).
 
முறை II:
 
 \(5^{-4} \times 5^{-2}\) \(=\) \(5^{(-4)+(-2)} = 5^{-6}\)
வகுத்தல் விதி
இந்த விதியின்படி, ஒரே அடிமான எண்களைக் கொண்ட இரண்டு படி எண்களை வகுக்கும் போது, அதின் அடுக்குகளைக் கழிக்கலாம்.
 
aman=amn, இங்கே, \(a \ne 0\) மற்றும் \(a\), \(m\), \(n\) முழுக்கள் ஆகும்.
Example:
1. 5452=542=52
 
 
2. 4642=462
 
\(=\) \((-4)^{6+2}\) \(=\) \((-4)^{8}\)
 
ஆகவே, 4642=48.
படி விதி
இந்த விதியின்படி, ஒரு படி எண்ணை மற்றொரு அடுக்கிற்கு உயர்த்தினால், அதன் அடுக்குகளைப் பெருக்கலாம்.
 
\((a^m)^n = a^{mn}\), இங்கே, \(a \ne 0\) மற்றும் \(a\), \(m\), \(n\) முழுக்கள் ஆகும்.
Example:
1. \((5^2)^3 = (5)^{2 \times 3} = 5^{6}\).
 
2. \([5^{(-2)}]^3 = 5^{(-2) \times 3} = (5)^{-6}\).
 
3. \([(-5)^{2}]^{3} = (-5)^{2 \times 3} = (-5)^{6}\).
 
4. \([(-5)^{2}]^{-3} = (-5)^{2 \times (-3)} = (-5)^{-6}\).