PDF chapter test TRY NOW
நாம் முந்தைய வகுப்புகளில் சில எண்களை எவ்வாறு வர்க்கங்களாகவும், கனங்களாகவும் எழுதலாம் எனப் படித்திருக்கிறோம். \(2\)-ஐ அடுக்காக கொண்ட எண் வர்க்கம் எனப்படும் மேலும், \(3\)-ஐ அடுக்காக கொண்ட எண் கனம் எனப்படும். ஒரு எண்ணின் அடுக்கானது \(2\) மற்றும் \(3\)-ஆக மட்டும் இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒரு எண்ணின் அடுக்கானது எந்த எண்ணாகவும் இருக்கலாம்.
பொதுவாக அடுக்கானது, அடிமான எண்ணின் வலப்பக்கத்தில் மேலெழுத்தாக குறிக்கப்படும்.
ஒரு எண்ணின் அடுக்கானது அதை எத்தனை முறை பெருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதை \(b^n\) என்று குறிப்பது வழக்கம். இதில், b என்பது அடிமானம் அல்லது அடி மற்றும் n என்பது அடுக்கு அல்லது படி எனப்படும்.
மிகை அடுக்குகளைக் கொண்ட படிகள்
\(2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2\) \(=\) \(14\)
இங்கே, \(2\) ஆனது \(7\) முறை கூட்டப்படுகிறது. எனவே, இந்த செயல்முறையை \(2 \times 7 = 14\)என எழுதலாம்.
அதே வழியில், \(2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2 = 32\).
இங்கே, \(2\) ஆனது \(5\) முறை பெருக்கப்படுகிறது. எனவே, இந்த செயல்முறையை \(2^5 = 32\) என எழுதலாம்.
Example:
\(2 = 2^1\)
\(2 \times 2 = 2^2 = 4\)
\(2 \times 2 \times 2 = 2^3 = 8\)
\(2 \times 2 \times 2 \times 2 = 2^4 = 16\)
\(2 \times 2 \times 2 \times 2 \times 2 = 2^5 = 32\)
இங்கே, எண் \(2\) ஆனது \(1\), \(2\), \(3\), \(4\) மற்றும் \(5\) ஆகிய அடுக்குகளைப் பெற்றுள்ளது. இதுவே மிகை அடுக்குகளைக் கொண்ட படிகள் எனப்படும்.
Important!
மிகை அடுக்குகளைக் கொண்ட மிகை எண்கள் நேர்மறை மதிப்பை மட்டுமே கொண்டிருக்கின்றன.