PDF chapter test TRY NOW

ax2+bx+c என்ற வடிவில் உள்ள கோவையைக் காரணிப்படுத்தல்.
வெளிப்பாட்டைக் காரணியாக்குவதற்கான செயல்முறை.
 
படி 1: எண்கெழுக்கள் a, b மற்றும் cஐ எடுத்துக் கொள்ளவும்.
 
படி 2: a மற்றும் c இன் பெருக்கல் பலனைக் கணக்கிடவும். பெருக்கல் பலன் = ac கூட்டல் தொகை = b
  
படி 3: பெருக்கல் பலனை 2 எண்ணாக பிரிக்க வேண்டும். பிதிக் கிடைக்கும் எண்களில் பெருக்கல் பெருக்கல் பலனையும், 2 எண்ணின் கூட்டல் கூட்டல் பலனையும் கொடுக்க வேண்டும். அந்த 2 எண்ணையும் நடுவில் உள்ள உறுப்பாக பிரித்து எழுதவேண்டும்.
படி 4:  இப்போது கோவையில் உள்ள பொதுவான வெளிப்பாட்டை எடுத்துக்கொண்டு வெளிப்பாட்டை இரண்டு காரணிகளாக தொகுக்கவும்.
Example:
1. x^2+5x+6
 
நம்மிடம் a=1, b=5 மற்றும் c=6  உள்ளது.
 
இங்கே தயாரிப்பு = a \times c = (1 \times 6) = 6 மற்றும் கூட்டுத் தொகை = b = 5.
 
இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 5 ஆகவும், இரண்டு எண்களின் பெருக்கல் 6 ஆகவும் வரும்படி  இரு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
(2+3) = 5 மற்றும் (2 \times 3 = 6
 
எனவே 2, 3 எண்கள் சரியான காரணிகளாக இருக்கும்.
இதை கொடுக்கப்பட்டுள்ள கோவையின் மத்திய உறுப்பின் காரணிகளாக எழுதுவோம்.
 
x^2+5x+6
 
முதல் இரண்டு உறுப்புகளில் பொதுவானக் காரணியை தனியாகவும், முன்றாம் மற்றும் நான்காம் உறுப்புகளில் பொதுவான காரணியைத்  தனியாக எடுத்துக் கொள்வோம்.
 
= x^2+3x+2x+6
 
முதல் தொகுப்பில் x  பொதுவாக உள்ளது
அடுத்தத் தொகுப்பில் 2 பொதுவாக உள்ளது.
எனவே இவை இரண்டையும் வெளியே எடுத்துக்கொள்வோம்.
மாற்றத்தை அடைப்புக்குள் எழுதிக்கொள்வோம்.
 
=x(x+3)+2(x+3)
 
இப்பொழுது இரண்டிலும் உள்ள பொதுவான (x+3) ஐத் தனியாக எடுத்துக்கொண்டு, மற்றதைச் சேர்த்து எழுதுவோம்.
 
= (x+3)(x+2)
 
 
2. 2x^2-5x-3
 
நம்மிடம் a = 2, b = -5 and c = -3 உள்ளது.
 
இங்கே பெருக்கல் பலன் = a \times c = (2 \times -3) = -6 மற்றும் கூட்டுத் தொகை = b = -5.
 
இரண்டு எண்களின் கூட்டுத்தொகை -5 ஆகவும், இரண்டு எண்களின் பலன் -6 ஆகவும் வரும் இரு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
(-6+1) = -5 மற்றும் (-6\times 1)) =-6
 
எனவே 2, 3 எண்கள் சரியான காரணிகளாக இருக்கும்.
இதை கொடுக்கப்பட்டுள்ள கோவையின் மத்திய உறுப்பின் காரணிகளாக எழுதுவோம்
 
2x^2-5x-3 = 2x^2-6x+x-3
 
பொதுவாக உள்ள உறுப்புகளை வெளியே எடுத்துக்கொள்வோம்.
 
= 2x(x-3)+1(x-3)
 
இதிலும், பொது உறுப்புகளை வெளியே எடுத்துச் சேர்த்து எழுதுவோம்.
= (x-3)(2x+1)