PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வகை 3: ஒன்றாகச் சேர்த்துக் காரணிப்படுத்துதல்
 
சில நேரங்களில், கொடுக்கப்பட்ட கோவைகளில், பொதுக்காரணிகளைக் கொண்ட உறுப்புகளை மட்டும் ஒன்றாகச் சேர்த்து, அவ்வுறுப்புகளில் உள்ள பொதுக்காரணியை வெளியே எடுப்பதன் மூலம் எளிமையாகக் காரணிப்படுத்தலாம்.
 
3m2+mn+3mn+n2 என்ற கோவையைக் கவனியுங்கள்.
 
முதல் இரண்டு உறுப்புகளில் பொதுவானக் காரணியை தனியாகவும், முன்றாம் மற்றும் நான்காம் உறுப்புகளில் பொதுவான காரணியைத்  தனியாக எடுத்துக் கொள்வோம்.
 
3m2+mn¯+3mn+n2¯
 
முதல் தொகுப்பில் \(m\) பொதுவாக உள்ளது. அடுத்தத் தொகுப்பில் \(n\) பொதுவாக உள்ளது.
எனவே இவை இரண்டையும் வெளியே எடுத்த்துக்கொள்வோம்.
மாற்றத்தை அடைப்புக்குள் எழுதிக்கொள்வோம்.
 
=m(3m+n)+n(3m+n)
 
இப்பொழுது இரண்டிலும் உள்ள பொதுவான \((3m+n)\) ஐத் தனியாக எடுத்துக்கொண்டு, மற்றதைச் சேர்த்து எழுதுவோம்.
 
=(3m+n)(m+n)