PDF chapter test TRY NOW

மாறிகள்: மாறிகள் தெரியாத எண்களைக் குறிக்கும் எழுத்துகள் ஆகும்.
மாறிலிகள்:மாறிலிகள் என்பன மாறாத மதிப்புக் கொண்ட எண்கள் ஆகும்.
கெழுக்கள்:கெழுக்கள் என்பது மாறி உடன் பெருக்கலில் இருக்கும் எண்கள் ஆகும்.
இயற்கணித கோவை:
ஓர் இயற்கணித கோவை என்பது மாறிகள், மாறிலிகள், அடிப்படைச் செயல்கள்(+ மற்றும் -) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இயற்கணித உறுப்புகளைக் கொண்ட கணிதத் தொடர் ஆகும்.
இயற்கணிதக் கோவைகளைக் கட்டமைத்தல்:
இயற்கணித கூற்றை இயற்கணித கோவைகளாக மாற்றும் முறையை சில எடுத்துக்காட்டுடன் நினைவுக் கூர்வோம்.
 
செயல்பாடு கூற்றுஇயற்கணித கோவை
கூட்டல் 5 மற்றும் y-இன் கூடுதல்5 + y
கழித்தல்p லிருந்து 8 குறைவாக உள்ள எண்.p - 8
பெருக்கல்r இன் ஐந்து மடங்குடன் 7 அதிகரித்தல்5r +7
வகுத்தல்16y ஆல் வகுக்க\frac{16}{y}