PDF chapter test TRY NOW
சமன்பாடுகள்:
இரண்டு கோவைகளின் சமத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு கூற்றானது சமன்பாடு ஆகும்.
Example:
5x-1 என்பது ஒரு சமன்பாடு.
இங்கு, 'சமக்குறி'(=) -இன் இரு பக்கங்களிலும் கோவைகள் எழுதப்பட்டிற்கும்.
நேரிய சமன்பாடுகள்:
ஒரு சமன்பாடு ஒரே ஒரு மாறியில் அமைந்து அதன் உயரிய அடுக்கு ஒன்றாக(1) இருப்பின் அது ஒருபடி சமன்பாடு அல்லது நேரிய சமன்பாடு எனப்படும்.
Example:
3x-10
இங்கு 3x-10 என்பது x என்ற ஒரே மாறியில் அமைந்த சமன்பாடு ஆகும்.
ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட மாறிகளைக் கொண்ட ஒருபடிச் சமன்பாடுகள்:
Example:
x+y=10
இந்த சமன்பாடு x மற்றும் y என்ற இரண்டு மாறிகளைக் கொண்டு உருவானது. இவற்றின் மிக உயர்ந்த அடுக்கு 1. எனவே, இது இரு மாறியில் அமைந்த ஒருபடி சமன்பாடு ஆகும்.
x+2y+3z=6
இந்த சமன்பாடு x,y மற்றும் z என்ற மூன்று மாறிகளைக் கொண்டு உருவானது. இவற்றின் மிக உயர்ந்த அடுக்கு 1 எனவே, இது மூன்று மாறியில் அமைந்த ஒருபடி சமன்பாடு ஆகும்.