PDF chapter test TRY NOW
ஒரு நேர்க்கோட்டுச் சமன்பாடு இரண்டு மாறிகளில் அமைந்த சமன்பாடு எனில், அந்த வரைபடம் ஒரு
நேர்க்கோட்டைக் குறிக்கும்.
இரு மாறியில் அமைந்த வரைபடத்தை எடுத்துக்காட்டுடன் காணலாம்.
Example:
1. y = 2x + 3 என்ற சமன்பாட்டிற்கு வரைபடம் வரைக.
தீர்வு:
x க்கு மதிப்புகள் கொடுக்கும்போது கீழ்க்கண்டவாறு y இன் மதிப்பு கிடைக்கும்.
x = 0 எனும்போது, y = 2(0) + 3 = 3.
x = 1 எனும்போது, y = 2(1) + 3 = 5.
x = 2 எனும்போது , y = 2(2) + 3 = 7.
x = 3எனும்போது, y = 2(3) + 3 = 9.
x = 4 எனும்போது, y = 2(4) + 3 = 11.
கிடைக்கப்பெற்ற மதிப்புகளை அட்டவணைப்படுத்தக் கிடைப்பது,
x | 0 | 1 | 2 | 3 | 4 |
y | 3 | 5 | 7 | 9 | 11 |
எனவே, கிடைக்கப்பெற்ற புள்ளிகளை வரைபடத்தில் குறித்து கீழ்க்கண்டவாறு இணைக்கவும்.

2. y = \frac{5}{3}x + 5 என்ற சமன்பாட்டிற்கு வரைபடம் வரைக.
தீர்வு:
x க்கு மதிப்புகள் கொடுக்கும்போது கீழ்க்கண்டவாறு y இன் மதிப்பு கிடைக்கும்.
விகித எண்களின் விடையை தவிர்த்து முழுக்களை எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதாக வரைபடம் வரையலாம்.
x = 0 எனும்போது,
y = \frac{5}{3}(0) + 5
y = 5
y = 0 எனும்போது,
0 = \frac{5}{3}x + 5
-5 = \frac{5}{3}x
-5 \times \frac{3}{5} = x
-3 = x
எனவே, (0,5) மற்றும் (-3,0) என்ற புள்ளிகளை வரைபடத்தில் குறித்து கீழ்க்கண்டவாறு நேர்க்கோடு வரையலாம்.

வரைபடத்தின் பயன்பாடு
1 \text{கி.கி} தக்காளியின் விலை ₹30 எனில் 4.5 \text{கி.கி} தக்காளியின் விலையை வரைபடம் மூலம் கண்டறிக.
தீர்வு:
கொடுக்கப்பட்டது: 1 \text{கி.கி} தக்காளி =₹30.
எனவே,
2 \text{கி.கி} = 2 \times 30 = ₹60.
3 \text{கி.கி} = 3 \times 30 = ₹90.
4 \text{கி.கி} = 4 \times 30 = ₹120.
5 \text{கி.கி} = 5 \times 30 = ₹150.
கிடைக்கப்பெற்ற மதிப்புகளைக் கீழ்க்கண்ட படிகளின் மூலம் வரைபடத்தில் வரையலாம்.
படி 1: தக்காளியின் எடையை x அச்சில் எடுத்துக்கொள்வோம்.
படி 2: தக்காளியின் விலையை y அச்சில் எடுத்துக்கொள்வோம்.
படி 3: (1,30), (2,60), (3,90), (4,120) மற்றும் (5,150) என்ற புள்ளிகளை வரைபடத்தில் குறிக்கவும்.
படி 4: புள்ளிகளை இணைக்கவும்
படி 5: வரைபடத்தின் மூலம், 4.5 கி.கி தக்காளியின் விலை ₹135.
