PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\((0,4)\), \((1,5)\), \((2,6)\), \((3,7)\) மற்றும் \((4,8)\) வரைபடத்தாளில் குறிக்கவும்.
 
YCIND20220807_4208_Graph_05.png
 
கொடுக்கப்பட்ட புள்ளிகளில் \(y\) - அச்சை எடுத்துக் கொள்வோம்:
 
(I) \(4 = 0 + 4\)
 
(II) \(5 = 1 + 4\)
 
(III) \(6 = 2 + 4\)
 
(IV) \(7 = 3 + 4\)
 
(V) \(8 = 4 + 4\)
 
கொடுக்கப்பட்ட புள்ளிகள் நேர்க்கோட்டில் அமைவதைக் காணலாம்.
 
அனைத்துப்புள்ளிகளும் வரைபடத்தாளில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால் அதனை நேர்க்கோட்டு அமைப்பு எனலாம்.
 
இந்த எடுத்துக்காட்டில் ஒவ்வொரு வரிசைச்சோடியிலும் \(y\) இன் மதிப்பானது \(x\) இன் மதிப்பு \(4\) ஆக இருப்பதை காணலாம்.
 
எனவே இந்த கோட்டின் அமைப்பை \(y = x + 4\) என்ற இயற்கணித சமன்பாடாக எழுதலாம்.
 
இந்த நேர்க்கோட்டுக்கான வரைபடமானது நேர்க்கோட்டு வரைபடம் எனப்படும்.
 
நேர்க்கோட்டுச் சமன்பாடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள் ஒரு மாறியானது மற்றொன்றைச் சார்ந்து உள்ளது.
Example:
\(1\) கி.கி தக்காளியின் விலை \(₹25\). அதிக அளவு தக்காளி வாங்கினால் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
 
இங்கு, தக்காளியின் விலை அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். விலை ஆனது எடையைச் சார்ந்து உள்ளது.
 
எனவே, விலை என்பது சார்ந்த மாறி, எடை என்பது சாரா மாறி ஆகும்.