PDF chapter test TRY NOW
ஒரு பக்கம், ஒரு மூலைவிட்டம் மற்றும் ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும் போது
இணைகரம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(JU\) \(=\) \(8.5\) செ.மீ, \(JM\) \(=\) \(9\) செ.மீ மற்றும் \(\angle JUM\) \(=\) \(75^{\circ}\) என்ற அளவுகளைக் கொண்ட \(JUMP\) என்ற இணைகரம் வரைந்து அதன் பரப்பளவைக் கண்டறிக.
வரைமுறை:
படி1: \(JU\) \(=\) \(8.5\) செ.மீ என்ற நேர்கோடு வரைக.
படி 2: \(U\) இன் மீது \(\angle JUX=75^{\circ}\) அமைக்கவும்.
படி 3: \(J\) ஐ மையமாகக் கொண்டு \(9\) செ.மீ ஆரமுள்ள வட்டவில்லானது \(QX\) ஐ \(M\) இல் வெட்டுமாறு வரைந்து \(JM\) ஐ இணைக்கவும்.
படி 4: \(J\) ஐ மையமாகக் கொண்டு \(UM\) நீளத்திற்கு சமமான ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக.
படி 5: \(M\) ஐ மையமாகக் கொண்டு \(8.5\) செ.மீ ஆரமுள்ள வட்ட வில் வரைக. இவை \(P\) இல் வெட்டட்டும்..
படி 6: \(MP\) மற்றும் \(MJ\) ஐ இணைக்கவும். \(JUMP\) என்பது தேவையான இணைகரம் ஆகும்.
படி 7: \(M\) லிருந்து \(JU\) க்கு ஒரு செங்குத்து கோடு வரைந்து அளந்தால் இணைகரம் \(JUMP\) இன் உயரம் காணலாம்.
இணைகரத்தின் பரப்பளவு காணல்:
இணைகரத்தின் பரப்பளவு \(=\) அடிப்பக்கம் \(\times\) உயரம் சதுர அலகுகள்.
\(=\) \(8.5 \times 5.6\)
\(=\) \(47.60\) செ.மீ \(^2\)