PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரண்டு மூலைவிட்டங்களும் அவற்றிற்கு இடைப்பட்ட ஒரு கோணமும்
கொடுக்கப்பட்டிருக்கும் போது இணைகரம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(PR\) \(=\) \(10\) செ.மீ, \(QS\) \(=\) \(8\) செ.மீ மற்றும் \(\angle POQ\) \(=\) \(120^{\circ}\) அளவுகளைக் கொண்ட \(PQRS\) என்ற இணைகரம் வரைந்து அதன் பரப்பளவு காண்க.
வரைமுறை:
படி 1: \(PR\) \(=\) \(10\) செ.மீ என்ற நேர்கோடு வரைக.
படி 2: \(PR\) இன் மையப்புள்ளி \(O\) ஐக் குறிக்கவும்.
படி 3: \(O\) வழியாக \(\angle POQ\) \(=\) \(120^{\circ}\) என இருக்குமாறு \(XY\) என்ற கோடு வரைக.
படி 4: \(O\) ஐ மையமாகக் கொண்டு \(PR\) இன் இரு புறங்களிலும் \(XY\) இன் மீது \(4\) செ.மீ இரண்டு வட்ட விற்களை வரைக. அவை \(OX\) ஐ \(Q\) விலும் \(OY\) ஐ \(S\) லும் வெட்டட்டும்.
படி 5: \(PQ\), \(QR\), \(RS\) மற்றும்\(SP\) ஐ இணைக்க. \(PQRS\) என்பது தேவையான இணைகரம் ஆகும்.
படி 6: \(S\) லிருந்து \(PQ\) விற்கு ஒரு செங்குத்து கோடு வரைந்து அளந்தால் இணைகரம் \(PQRS\) இன் உயரம் கிடைக்கும்.
இணைகரத்தின் பரப்பளவு காணல்:
இணைகரத்தின் பரப்பளவு \(=\) அடிப்பக்கம் \(\times\) உயரம் சதுர அலகுகள்.
\(=\) \(8 \times 4.3\)
\(=\) \(34.40\) செ.மீ \(^2\)