PDF chapter test TRY NOW
Example:
\(10\) செ.மீ அளவுள்ள மூலைவிட்டம் கொண்ட \(CAMP\) என்ற சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
படி 1: \(CM = 10\) செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
படி 2: \(CM\) இக்கு மையக்குத்துக்கோடு \(XY\) ஐ வரைக. அது \(CM\) ஐ \(O\) இல் இருசமக்கூறிடும்.
படி 3: \(O\) ஐ மையமாகக் கொண்டு, \(O\) இன் இருபுறமும் \(5\) செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் \(OX\) ஐ \(P\) இலும் மற்றும் \(OY\) ஐ \(A\) இலும் வெட்டுமாறு வரைக.
படி 4: \(CA, AM, MP\) மற்றும் \(PC\) ஐ இணைக்க. \(CAMP\) என்பது தேவையான சதுரம் ஆகும்.
\(\text{சதுரத்தின் பரப்பளவு'} = \text{பக்கம்}^2\) சதுர அலகுகள்.
இங்கு, சதுரத்தின் பக்கம் \(=7.1\) செ.மீ
எனவே, சதுரத்தின் பரப்பளவு \(=50.41\) செ.மீ\(^2\).