PDF chapter test TRY NOW
ஒரு பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சதுரம் வரைதல் பற்றி இங்கு காணலாம்.
Example:
5 செ.மீ பக்க அளவு கொண்ட DAMP என்ற சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க
வரைமுறை:
படி 1: DA = 5 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.

படி 2: D இல், DX \perp DA ஐ வரைக.

படி 3: D ஐ மையமாகக் கொண்டு, 5 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது DX ஐ P இல் வெட்டட்டும்.

படி 4:. A மற்றும் P ஐ மையங்களாகவும், ஒவ்வொன்றும் 5 செ.மீ ஆரமுள்ள இரு வட்டவிற்கள் வரைக. அவை M இல் வெட்டட்டும்.

படி 5: AM மற்றும் PM ஐ இணைக்க. DAMP என்பது தேவையான சதுரம் ஆகும்.

சதுரத்தின் பரப்பளவு காணுதல்:
\text{சதுரத்தின் பரப்பளவு} = \text{பக்கம்}^2 சதுர அலகுகள்.
இங்கு, சதுரத்தின் பக்கம் =5 செ.மீ.
எனவே, சதுரத்தின் பரப்பளவு =5^2=25 சதுர அலகுகள்.